பொது செய்தி

இந்தியா

தினமலர் தலைப்பு : ஓர் விளக்கம்

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (432)
Advertisement

நேற்றைய(ஏப்.,22) தினமலர் இதழில் ஓ சேசப்பா! என்ற தலைப்பின் கீழ் இலங்கை துயர சம்பவம் குறித்த சில பதிப்புகளிலும் செய்தி பிரசுரமானது.அந்த தலைப்பு சரியில்லை என்று சில வாசகர்கள் பதிவிட்டிருந்தனர்.

கொடுமையான சம்பவம் நடந்து பெருமளவில் உயிர் இழப்பு நேரும்போது, கடவுளே இது என்ன கொடுமை என்று மக்கள் குமுறுவது இயற்கை.


கிறிஸ்துவர்களாக இருந்தால், ஓ ஆண்டவரே அல்லது இயேசுவே என்று சொல்லக்கூடும். சேசப்பா என்பது இலங்கையில் வாழும் தமிழ் கிறிஸ்துவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை. அந்த அடிப்படையில், ஒரு கிறிஸ்துவரின் குமுறலை எதிரொலிக்கும் விதமாகத்தான் அந்த தலைப்பு தரப்பட்டிருக்கிறது. மற்றபடி, யாரையும் கேலி செய்வதோ, யார் மனதையும் புண்படுத்துவதோ தினமலர் நோக்கம் கிடையாது.


அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு குறுகிய வட்டத்துக்குள்ளும் சிக்கிவிடாமல் தேச சேவையிலும் மக்கள் பணியிலும் ஈடுபட்டு வருகிற தினமலர் பற்றி நாட்டுக்கே தெரியும். இருந்தாலும், மேற்படி தலைப்பு தங்கள் மனதை புண்படுத்தி விட்டதாக யாரேனும் கருதினால், அதற்காக மிகவும் வருந்துகிறேன்.

-எல்.ஆதிமூலம், இயக்குனர் மற்றும் பொறுப்பாளர், தினமலர் இணையதளம்.

Advertisement


வாசகர் கருத்து (432)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivakumaran - Coimbatore,இந்தியா
24-ஏப்-201919:21:45 IST Report Abuse
sivakumaran இந்த தலைப்பை போடும் முன் சற்று யோசித்திருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது. ஏற்கனவே தினமலர் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று ஒரு தோற்றம் சமீபகாலத்தில் வந்து விட்டது, இது தினம்மலர் நிர்வாகத்திற்கு தெரிந்திருக்கும், அப்படியிருக்க இப்படி ஒரு சிக்கல் தேவையா, மனித உயிர்கள் பலியான நிலையில் வெறும் குண்டுவெடிப்பு என்று தலைப்பு போடு விட்ருக்கலாம். நாளை வேறெங்கேயும் மனித உயிர்கள் பலியானால் அந்த கடவுளின் பெயர் போட்டு தலைப்பிடமுடியுமா என்று யாராவது கேட்டால் சங்கடம் தானே. இதற்கு ஒரு விளக்கம் அளித்து மேலும் சங்கடத்திற்கு ஆலகாமல் நிறுத்தி விட்டீர்கள். இனியாவது சற்று யோசித்து தலைப்பு வையுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
aloy - india,இந்தியா
24-ஏப்-201919:07:35 IST Report Abuse
aloy ஓ சேசப்பா ,இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிர் நீத்த அணைத்து ஆத்மாக்களுக்காவும் வேண்டிக்கொள்ளுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
செவிலியன் செந்தில் குமார் sir heading was good...i like it...your r the one and only paper supports the Hindus intuition.. we love it go head...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X