Lokpal's First Office Address Is A 5-Star Hotel In Delhi | சொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம்

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (19)
சொகுசு, ஒட்டலில், லோக்பால், அலுவலகம்

புதுடில்லி: லோக்பால் அமைப்பிற்கான தற்காலிக அலுவலகம் சொகுசு ஓட்டலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் உட்பட, உயர் பதவியில் உள்ளோர் மீதான ஊழல்களை விசாரிக்கும், லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பினாகி சந்திர கோஷ், 66, தலைமையில் எட்டு உறுப்பினர்களை நியமிக்க அமைக்கப்பட்ட தேர்வுக்குழு அளித்துள்ள பரிந்துரையின்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார். இவர்கள் கடந்த மாதம் பதவியேற்றுக்கொண்டனர்.






இந்த அமைப்புக்கென தனியாக அலுவலகம் இல்லாமல் இருந்த நிலையில், டில்லி சாணக்கியபுரி என்ற பகுதியில் உள்ள ''ஓட்டல் அசோக்'' என்கிற ஐந்து நட்சத்திர சொகுசு ஒட்டலில் தற்காலிகமாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு லோக்பால் அமைப்பில் உள்ள எட்டு உறுப்பினர்களுக்கும் போதிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X