பொது செய்தி

தமிழ்நாடு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக சென்னை வந்தார்

Updated : ஏப் 22, 2019 | Added : ஏப் 22, 2019
Advertisement
துணைஜனாதிபதி,வெங்கையாநாயுடு,சென்னை,2நாள்,சுற்றுபயணம்

சென்னை:துணைஜனாதிபதி வெங்கையாநாயுடு 2 நாள் பயணமாக பெங்களூரில் இருந்து தனிவிமானத்தில் சென்னை வந்தார்.
அவரை கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போலீஸ் டி.ஜி.பி., ராஜேந்திரன், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, அதிகாரிகள் விமானநிலையத்தில் வரவேற்றனர். சென்னையில் தங்கும் அவர் நாளை காலை சிறப்பு ரயிலில் ஆந்திர மாநிலம் செல்கிறார். அங்கிருந்து சித்தூருக்கு காரில் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
. பின் காலை 11.30 மணிக்கு சிறப்பு ரயிலில் சென்னை திரிசூலம் ரயில் நிலையம் வருகிறார். திரிசூலத்தில் இருந்து பகல் 1 மணிக்கு பழையபல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலை விழாவில் கலந்து கொள்கிறார். மாலை 6 மணிக்கு தி.நகரில் உள்ள பள்ளி விழாவில் கலந்துகொண்டு, அடையாறில் உள்ள இல்லத்தில் தங்குகிறார். ஏப்ரல் 24ல் காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து தனிவிமானத்தில் திருப்பதி செல்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X