பதிவு செய்த நாள் :
அமேதியில், 'ஷூ' வினியோம்: பிரியங்கா ஆவேசம்

அமேதி: ''அமேதி மக்களுக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'ஷூ' வினியோகித்துள்ளார்; இது, அந்த மக்களை அவமதிக்கும் செயல்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, ஆவேசமாக கூறியுள்ளார்.

அமேதி,Amethi, Priyanka,மக்களுக்கு,ஷூ,Shoes,வினியோகிப்பதா?


உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, அமேதி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அமேதி தொகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இலவசமாக, ஷு வழங்கினார். இது துகுறித்து, அமேதியில் நேற்று பிரசாரம் செய்த, காங்., பொதுச் செயலரும், ராகுலின் சகோதரியுமான, பிரியங்கா கூறியதாவது: அமேதி மக்கள், பிச்சைக்காரர்களா... அவர்களுக்கு, இலவசமாக, ஷூ வழங்கியதன்

மூலம், அந்த மக்களை, ஸ்மிருதி இரானி அவமதித்துள்ளார். வெளியூரில் இருந்து வந்து, அமேதி மக்களிடம் ஓட்டு பிச்சை கேட்பவர்கள் தான், பிச்சைக்காரர்கள்.அமேதி மக்களுக்கு என, சுய கவுரவம் உள்ளது. ராகுலைஅவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், ஸ்மிருதி இரானி, இப்படி செய்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

ராகுல் மனு ஏற்பு:


காங்கிரஸ் தலைவர் ராகுல், அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில், அவருடைய வேட்பு மனு, ஏற்கனவே ஏற்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதிக்கு இன்று ஓட்டுப் பதிவு நடக்கிறது.

இந்நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர் துருவ் லால் மற்றும் மூன்று பேர், ராகுலின் வேட்பு மனு குறித்து, ஆட்சேபம் தெரிவித்தனர்.'பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில், ராகுல் முதலீடு செய்துள்ளார். அப்போது, தன்னை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் எனக் கூறியுள்ளார். மேலும், கல்வித் தகுதி குறித்த தகவலையும், தவறாக அளித்துள்ளார்.'அதனால், அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்' என, அவர்கள் கோரியிருந்தனர்.அமேதி தொகுதி, ஐந்தாம் கட்டத்தில்,

Advertisement

தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு கடைசி நாளான நேற்று, ராகுலின் வேட்பு மனு ஏற்கப்படுவதாக, தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். போதிய ஆதாரங்களை அளிக்கவில்லை என, ஆட்சேபனைகளை, தேர்தல் அதிகாரி நிராகரித்து உள்ளார்.

'மக்கள் நீதிமன்றம் முடிவு செய்யும்'


காங்கிரஸ் தலைவர், ராகுல் கூறியதாவது:அடுத்த மாதம், 23ல், லோக்சபா தேர்தலில்பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அன்று, மக்கள் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, வெளியாகப் போகிறது. தாமரை சின்னத்தைச் சேர்ந்த, காவலாளி தான், உண்மையான திருடன் என்பதை, மக்கள் நீதிமன்றம் முடிவு செய்யும். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - chennai,இந்தியா
24-ஏப்-201916:56:43 IST Report Abuse

oceஇந்த பெண் தேர்தல் நேரத்தை தவிர்த்து மற்ற எந்த நேரத்திலும் வாயை திறந்த தில்லை. இதை அமேதி மக்கள்ல கவனிக்க வேண்டும்.

Rate this:
bal - chennai,இந்தியா
23-ஏப்-201920:05:17 IST Report Abuse

balஇந்த பிரியங்கா ஒரு நாள் கூட இந்த தொகுதிக்கு போனதே இல்லை.. இப்போ மட்டும் என்னவாம்.. அதோட தேர்தலுக்கு முன் ஜீன்ஸில் இருந்தார்...இப்போ மட்டும் புடவை மாட்டி ஊரை ஏமாற்றுகிறார்...

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-ஏப்-201918:53:42 IST Report Abuse

இந்தியன் kumarஅமேதி தொகுதி மக்கள் தெளிவான முடிவு எடுப்பார்கள் ,சேவை செய்ய வில்லை என்றால் ஷூவால் தங்கள் தலையிலே அடித்து கொள்வார்கள்

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X