சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

'ஏசி'யை விடவும் அதிக குளிர்ச்சியாக இருக்கும்!

Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'ஏசி'யை விடவும் அதிக குளிர்ச்சியாக இருக்கும்!


இயற்கை முறையில், வீட்டை குளுமையாக வைக்க வழி கூறும், எக்ஸ்னோரா நிர்மல்: கோடை என்றாலே வெப்பமும், வியர்வையும் இணைந்து, நம்மை மிரட்டும். வீட்டிற்குள்ளும் வெப்பமாக இருக்கும். அதற்காக, 24 மணிநேரமும், 'ஏசி' போட முடியாது. எனவே, மேஜை மின்விசிறியின் அருகில், அகலமான கிண்ணத்தில், ஐஸ்கட்டிகளை போட்டு வைத்தால், 'ஏசி'யை விடவும், அறையை அதிக குளிர்ச்சியுடன் வைத்திருக்கும்.ஜன்னல்களை திறந்து வைப்பதால், காற்றின் சுழற்சி, அறையில் அதிகமாக இருந்தாலே, அதிக வெப்பத்தை குறைத்து, குளிச்சியை தரும். இதுதவிர, காட்டன் துணியில் தைத்த திரைச்சீலைகளை ஜன்னல்களுக்கு போடலாம்.கோடைக்காலத்தில் வீட்டினுள்ளே, துளசி, கற்றாழை உள்ளிட்ட செடிகளை, சிறுசிறு தொட்டிகளில் வளர்க்கலாம். அது, வீட்டை குளிர்ச்சியாக வைக்க உதவும். மஞ்சள், சிவப்பு, நீலம் மாதிரியான நிறங்களை தவிர்த்து, வெள்ளை நிற விளக்குகளை பயன்படுத்தலாம். இவை குறைவான வெப்பத்தையே வெளியிடும்.வெள்ளை நிறமானது வெப்பத்தை ஈர்க்காது என்பதால், வீட்டின் மேற்கூரை வெள்ளை நிறத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். துணிகளைத் துவைத்து வீணாகும் நீரை, மொட்டை மாடியில் ஊற்றலாம். இதனால் வீட்டினுள் குளுமை இறங்கும்.தென்னம், பனை ஓலை, வெட்டி வேர் இவற்றால் செய்யப்பட்ட தடுப்பு திரைகளை, ஜன்னல்களிலும், பால்கனிகளிலும் தொங்க விடுவதால், வீட்டின் உள்பகுதி குளிர்ச்சியாகும். தனி வீடாக இருப்பின், மாடியில், கோணிகளை பரப்பி, அதன் மீது நீரை ஊற்றலாம். இதனால், வீட்டின் உள்ளே வெப்பம் இறங்குவது குறையும். மொட்டை மாடியில் தென்னங்கீற்றுகளால் பந்தல் போட்டு, கோடை முடியும் வரை வைத்திருக்கலாம்.வரவேற்பு அறை, படுக்கையறை, சமையலறை உள்ளிட்ட இடங்களில், வீட்டில் புழங்கும் சூடான காற்றை வெளியேற்றும், 'எக்ஸ்ஹாஸ்ட்' மின்விசிறி பொருத்தலாம்.புதிதாக வீடு கட்டுவோர், கூரையின் உயரம், 12 அடி இருக்கும்படி அமைத்தால், வீட்டினுள் குளிர்ச்சி நிரந்தரமாகும். அஸ்திவாரம் அமைக்கும் போது, 2 அடிக்கு மேலாக, 4 அடிக்குள்ளாக, மணல் போட்டு அமைத்தால், வீட்டின் குளிர்ச்சிக்கு, அது அடிப்படையாக இருக்கும். வரவேற்பு, சமையல் மற்றும் படுக்கையறை என, அனைத்து இடங்களிலும், குறைந்தபட்சம் ஒரு ஜன்னல் இருந்தால், சீரான காற்றோட்டத்துக்கும், வீட்டின் குளுமைக்கும் உதவும். ஜன்னல் வைக்க முடியாத பட்சத்தில், 'எக்ஸ்ஹாஸ்ட்' மின்விசிறி பொருத்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shanmugasundaram settu - tirupur,இந்தியா
23-ஏப்-201917:02:02 IST Report Abuse
shanmugasundaram settu சூப்பர் சார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X