சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement
  'டவுட்' தனபாலு

ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்: வயநாடு தொகுதி மக்களுக்கு ஒரு கோரிக்கை. டில்லியில் இருந்து, விமானத்தில் வந்திறங்கி, இங்கு போட்டியிடுவோரை, நம்ப வேண்டாம். பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிப்பதன் மூலம், இறக்குமதி தலைவர்கள் எங்களுக்கு தேவையில்லை என்பதை, நிரூபித்து காட்டுங்கள்.

டவுட் தனபாலு: இறக்குமதி தலைவர்களை நம்பக் கூடாது என்ற உங்களின் இந்த அறிவுரை, கேரளாவின் வயநாட்டில் போட்டியிடும், ராகுலுக்கு மட்டும்தானா... இல்லை, குஜராத்தில் பிறந்து வளர்ந்து, உ.பி.,யின் வாரணாசியில் போட்டியிடும், மோடிக்கும் பொருந்துமா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!
காங்.,கைச் சேர்ந்த, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்: லோக்சபா தேர்தலில், என் மகன் நகுல் வெற்றி பெற்று, உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், அவன் சட்டையை கிழித்து எறியுங்கள்.
டவுட் தனபாலு: தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை, உங்க மகன் எப்பாடுபட்டாவது, நிறைவேற்றிடுவாருங்கற நம்பிக்கையில் சொல்றீங்களா... இல்லை, பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, எவராலும் உங்க மகனை நெருங்கிட முடியாதுங்கற நம்பிக்கையில் சொல்றீங்களா... மக்கள் பிரதிநிதிகள் சட்டையை, மக்களால் கிழிக்க முடியாது... அவர்களாகவே கிழித்துக் கொண்டால் தான் உண்டு... இது தான், வரலாறு என்பது, மக்களுக்கு, 'டவுட்'டே இல்லாமத் தெரியும்...!
காங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்: லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் வரை பொறுத்திருங்கள். சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்து விடும். அவர்களுக்கு வேறு வழியே இல்லை.
டவுட் தனபாலு: உங்களை எதிர்த்து போட்டியிடும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தயவு, காங்கிரசுக்கு தேவையில்லைன்னு சொல்லக் கூடிய நிலையில், நீங்கள் இல்லை தானே... அப்புறம் எதற்கு இந்த வீர வசனம்... அடுத்தவர்களை விமர்சிக்கிறேன்கற பேர்ல, உங்களை நீங்களே ஏன் கிண்டல் பண்ணிக்குறீங்க என்பதுதான், என்னோட, 'டவுட்!'

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
24-ஏப்-201911:16:04 IST Report Abuse
sankar சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தயவு, காங்கிரசுக்கு தேவையில்லைன்னு சொல்லக் கூடிய நிலையில் பப்பு இல்லை - அப்புறம் எதற்கு இந்த வீர வசனம்..
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
24-ஏப்-201908:28:39 IST Report Abuse
அம்பி ஐயர் “ மக்கள் பிரதிநிதிகள் சட்டையை, மக்களால் கிழிக்க முடியாது... அவர்களாகவே கிழித்துக் கொண்டால் தான் உண்டு... ” ஆஹா... சூப்பர்... யாரையோ தாக்குற மாதிரி இருக்குதே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X