அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மைக்ரோ மேனேஜ்மென்ட்' திட்டம்
செயல்படுத்த ஸ்டாலின் உத்தரவு

நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது, 'மைக்ரோ மேனேஜ்மென்ட்' திட்டப்படி, தேர்தல் பணிகளை மேற்கொண்டு, ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என, தி.மு.க.,வினருக்கு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மைக்ரோ மேனேஜ்மென்ட்,திட்டம்,ஸ்டாலின்,உத்தரவு


தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடவில்லை என்றால், பொறுப்பாளர்களின் கட்சி பதவி பறிக்கப்படும் என்றும், அவர் எச்சரித்துள்ளார்.தமிழகத்தில், லோக்சபா தேர்தல் மற்றும், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், ஏப்ரல், 18ல் முடிந்தது. நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மட்டும், மே, 19ல் நடைபெறுகிறது. தி.மு.க., சார்பில், திருப்பரங்குன்றத்தில், டாக்டர் சரவணன்; அரவக்குறிச்சியில், செந்தில் பாலாஜி; சூலுாரில், பொங்கலுார் பழனிசாமி; ஒட்டப்பிடாரத்தில், சண்முகையா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நான்கு தொகுதிகளுக்கும், தேர்தல் பொறுப்பாளர்களாக, தி.மு.க.,வில், அமைப்பு ரீதியாக உள்ள, 65 மாவட்ட செயலர்கள், 50 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நான்கு தொகுதிகளிலும், தலா, இரண்டு நாட்கள் என, மே, 1 முதல், 8ம் தேதி வரை, ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.

இந்த தேர்தல், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.மேல்மட்ட நிர்வாகிகள் முதல், கீழ் மட்ட நிர்வாகிகள் வரை, அனைவரையும் ஒருங்கிணைக்கும், மைக்ரோ மேனேஜ்மென்ட் திட்ட அடிப்படையில், நான்கு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என, தேர்தல் பொறுப்பாளர்களுக்கு, ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

'திருப்பரங்குன்றம் தொகுதியில், குறைந்தபட்சம், 25 ஆயிரம் முதல், அதிகபட்சம், 40 ஆயிரம் ஓட்டுகள்; மற்ற மூன்று தொகுதிகளிலும், தலா, 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற வேண்டும்' என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த நான்கு தொகுதிகளிலும், ஆளுங்கட்சிக்கு இணையாக தேர்தல் செலவு செய்யவும், தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல, மெத்தனமாக இல்லாமல், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என, கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.'அலட்சியம் காட்டினால், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, யாராக இருந்தாலும், அவர்களின் கட்சி பதவியை பறிக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்' என, அக்கட்சி வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

மைக்ரோ மேனேஜ்மென்ட் என்றால் என்ன?


* ஒரு சட்டசபை தொகுதியில், 2.5 லட்சம் ஓட்டுகள்; 250 ஓட்டுச்சாவடிகள் வரை இருக்கும். ஒரு ஓட்டுச்சாவடியில், 750 முதல், 1,250 ஓட்டுக்கள் வரை காணப்படும். தொகுதி

Advertisement

பொறுப்பாளரின் கீழ், 20 மாவட்ட செயலர்கள் பணியாற்றுவர். ஒரு மாவட்ட செயலருக்கு, 10 ஆயிரம் முதல், 12 ஆயிரம் ஓட்டுகள் வரை பிரித்து கொடுக்கப்படும்

*ஒரு மாவட்ட செயலரின் கீழ், ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 1,000 முதல், 1,500 ஓட்டுகள் வரை திரட்டும் வகையில், ஒன்றிய செயலர்கள், நகர செயலர்கள், பகுதி செயலர்கள் நியமிக்கப்படுவர். இவர்களின் கீழ், 200 ஓட்டுகளை பெறும் வகையில், வட்ட செயலர், கிளை செயலர்கள் பொறுப்பாளர்களாக செயல்படுவர்

* ஒவ்வொரு வாக்காளர்களையும், கீழ் மட்ட அளவில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், தினமும் சந்தித்து பேசி, கவனித்து, அவர்களின் ஓட்டுகளை ஈர்க்க வேண்டும். தேர்தல் பொறுப்பாளர்களை கண்காணிக்கவும், தனிக்குழு உள்ளது

* இவ்வாறு, மேல் மட்டம் முதல், கீழ் மட்டம் வரையிலான ஓட்டுக்களை சிந்தாமல், சிதறாமல், தங்களின் வேட்பாளர்களுக்கு பெற்று தர வேண்டும். துல்லியமான நிர்வாகத்தை கடைப்பிடித்து, ஓட்டுகளை பெறும் நடைமுறையே, மைக்ரோ மேனேஜ்மென்ட் திட்டம் என, கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
24-ஏப்-201917:20:42 IST Report Abuse

oceநாலு தொகுதிகளில் ஜெயித்து விட்டால் ஆட்சி கிடைத்து விடுமா. சரி அப்படியே கிடைத்தாலும் எப்ப பார்த்தாலும் மத்திய அரசை திட்டி விட்டு ஆட்சியில் உட்கார்ந்தவுடன் அவர்களை திட்ட முடியுமா. அப்படி திட்டினால் ஆட்சியில் நீடிக்க முடியுமா. மோடிஜி இருக்கும் வரை நடக்காது. மைக்ரோவேவ் ஓட்டர்ஸ் மூடு சேஞ்சுக்கு காத்திருக்கும் மக்களே உங்கள் வாக்கு பின்னால் வேஸ்ட்டாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். .

Rate this:
oce - tokyo,ஜப்பான்
24-ஏப்-201917:12:22 IST Report Abuse

oceவீடு தேடி எதற்கு வருகிறார்கள். சம்பந்தம் பேசவா.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
24-ஏப்-201917:11:29 IST Report Abuse

oceஒவ்வொரு வாக்காளர்களையும், கீழ் மட்ட அளவில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், தினமும் சந்தித்து பேசி, கவனித்து, அவர்களின் ஓட்டுகளை ஈர்க்க வேண்டும். தேர்தல் பொறுப்பாளர்களை கண்காணிக்கவும், தனிக்குழு உள்ளது.இதை மைக்ரோ வேவ் ஓட்டர்ஸ் மூட் சேஞ்ச் என்று அழைக்கலாமா. பொது மக்களே உஷார். அண்ணன்கள் உங்களை கஜோல் பண்ண உங்கள் வீடுகளுக்கு வருவார்கள். செம்புகளை வீட்டிற்குள் மறைத்து வையுங்கள். உங்களை கடந்த அறுபது மாதங்களிலும் சந்திக்காதவர்கள் அறுபதாவது மாத்தில் மட்டும் வீடு தேடி உங்களிடம் பேச வருகிறார்கள். இவர்களது தில்லா ல்ங்கிடி வேலைகளை கவனித்து அவர்கள் உங்களிடம் அடிக்கும் ஜால்ராக்களுக்கு தலையை மட்டும் ஆட்டுங்க்ள. தேர்தலில் யாருக்கு ஓட்டளிக்க வேண்டுமோ அவருக்கு போடுங்கள்.

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X