பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
24 மணி நேரமும் பூத் ஏஜென்ட்களுக்கு அனுமதி :
சத்யபிரதா சாஹு திட்டவட்டம்

சென்னை:''ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள், பூத் ஏஜென்ட்கள், 24 மணி நேரமும் அனுமதிக்கப்படுவர்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு கூறினார்.

24 மணி நேரம்,பூத் ஏஜென்ட்,அனுமதி,சத்யபிரதா சாஹு,திட்டவட்டம்


அவரது பேட்டி: மதுரையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு, 'சீல்' வைக்கப்பட்டதா அல்லது சீல் அகற்றப்பட்டதா என, தெரியவில்லை.நேரில் ஆய்வு செய்து அறிக்கை தரும்படி, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி, பாலாஜியிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர், விரைவில் அறிக்கை தருவார்.தர்மபுரி, கடலுார், திருவள்ளூரில், 10 இடங்களில், மறு ஓட்டுப்பதிவு நடத்த, தலைமை தேர்தல் ஆணையரிடம் இருந்து, விரைவில் தகவல் வரும்.

'வன்முறையால், வாக்காளர்களால், ஒரு ஓட்டுப்பதிவு மையத்திற்கு வந்து ஓட்டளிக்க முடியவில்லை' என, வி.சி., தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்படும்.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.துணை ராணுவப் படையினரும், போலீசாரும் அங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வளாகத்திற்குள், 24 மணி நேரமும், பூத் ஏஜென்ட்கள் அனுமதிக்கப்படுவர்.தேனியில், இரவு, 10:00 மணிக்கு மேல், பூத் ஏஜென்ட்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற, புகார் குறித்து, விசாரிக்கப்படும்.

இடைத்தேர்தல் நடக்கவுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் மட்டுமே, தேர்தல் பறக்கும் படையினர், பணியில் ஈடுபடுவர். அதேநேரத்தில், தமிழகம் முழுவதும்,

தேர்தல் நன்னடத்தை விதிகள், அமலில் உள்ளன.எனவே, புதிய திட்டங்களை அரசால் அறிவிக்க முடியாது. நிர்வாகம் தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தினாலும், தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். இவ்வாறு, சத்யபிரதா சாஹு கூறினார்.

கூடுதல் தேர்தல் அதிகாரி நேரடி விசாரணை


மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில், தாசில்தார் சம்பூர்ணம் அனுமதியின்றி நுழைந்தது தொடர்பாக, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி, நேற்று விசாரணை நடத்தினார்.மதுரை லோக்சபா தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசு மருத்துவக் கல்லுாரி மையத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

முற்றுகை


ஏப்., 20 அன்று ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு, உதவி தேர்தல் அலுவலரான, தாசில்தார் சம்பூர்ணம் அனுமதியின்றி சென்று, முக்கிய ஆவணங்களை நகல் எடுத்ததாக சர்ச்சை எழுந்தது.அனுமதியின்றி நுழைந்தவர்கள் மீது, நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், அ.ம.மு.க., வேட்பாளர், டேவிட் அண்ணாதுரை, ம.நீ.மை., வேட்பாளர், அழகர் மற்றும் கட்சியினர் மருத்துவக் கல்லுாரி மையத்தை, முற்றுகை இட்டனர்.

இது தொடர்பாக, தாசில்தார் சம்பூர்ணம், மாநகராட்சி ஊழியர்கள் சூர்யபிரகாஷ், ராஜபிரகாஷ், சீனிவாசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் உத்தரவிட்டார்.இதுகுறித்து, கலால் துறை அதிகாரி, குருசந்திரனுக்குநோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.கூடுதல் தலைமை இருப்பினும், அதிகாரிகளை அனுப்பியதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை தேர்தல் அதிகாரி, சத்ய பிரதா சாஹுவிடம் எதிர்க்கட்சியினர் மனு அளித்தனர்.

Advertisement

இதையடுத்து, நேற்று மதுரை வந்த, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஆவணங்கள் உள்ள அறைகளை ஆய்வு செய்தார்; வீடியோ பதிவுகளையும் ஆய்வு செய்தார்.மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன், அனுமதியின்றி நுழைந்த நான்கு பேர் மற்றும் போலீஸ் துணை கமிஷனர், சசிமோகன் உட்பட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களையும் விசாரித்தார். வேட்பாளர்களின் கருத்துக்களை கேட்டு, மனுக்களையும் பெற்றார்.

விசாரணை அறிக்கை


பின், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கூறியதாவது:ஓட்டு எண்ணிக்கை மையத்தில், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு காரணமான, அதிகாரிகளிடம் விசாரணை நடந்தது. தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் கமிஷனிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும்.ஓட்டு எண்ணிக்கை மையம் குறித்து, சில வழிமுறைகளை தேர்தல் கமிஷன் வகுத்துள்ளது. அந்த வழிமுறைகளின்படி அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

கருத்து


அந்த வழிமுறைகள், எந்த அளவுக்கு பின்பற்றப்பட்டுள்ளன என்பதை, விசாரணை செய்துள்ளேன். வேட்பாளர்கள், ஏஜன்ட்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்களும், கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.மையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த அதிகாரி, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர் தான். இவ்வாறு கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
24-ஏப்-201918:14:53 IST Report Abuse

oceவாக்களர்கள் ஒவ்வொருவரும் வீட்டிலிருந்த படியே செல் மூல்ம் ஒரே தடவை அழுத்தி அழியும் ஸ்மார்ட் எண் வழியில் வாக்களிக்கும் நவீன முறை வரவேண்டும். அந்த வாக்களிப்புக்கு பிரத்யேகமாக தானாகவே அழிந்து மறையும் ஸ்மார்ட் கார்டுகள் தயாரித்து வழ்ங்க வேண்டும். ஸ்மார்ட் கார்டு வரிசை எண்கள் வாக்களித்த வாக்கு பெட்டிகளில் உரிய சின்னத்தில் பதிவானவுடன் ஸ்மார்ட் கார்டிலிருந்து தானாகவே அழிந்து விடவேண்டும். (அது வரை அதன் மீது தற்காலிகமாக ஒட்டியுள்ள ஸ்டிக்கர் கைவிரல் பட்டாலும் ஆக்டிவேட் ஆகாது. ஸ்டிக்கரை நீக்கியவுடன் அழுத்தவேண்டும்.) வாக்கு பெட்டிகளில் பதிவான ஸ்மார்ட் கார்டுகளின் மொத்த எண்ணிக்கையை வாக்காளர் பட்டியலில் உள்ளபடி கணக்கிட்டு கூட்டி பார்த்து கட்சி வாரியாக பிரித்து முடிவு அறிவிக்க வேண்டும். .இந்த முறையை பின்பற்றினால் எந்த கொம்பனும் தேர்தல் முடிவுகளுக்கு பாதகம் செய்ய முடியாது. தேர்தல் நாளில் காலை முதல் அன்று மாலை வரை மக்கள் உபயோகிக்கும் அனைத்து செல்களிலும் கட்சி தேர்தல் சின்னங்கள் ஒரே முறை திறந்தால் தெரியும்படி செல்கம்பெனிகள் மூலம் பதிவிட வேண்டும். .

Rate this:
oce - tokyo,ஜப்பான்
24-ஏப்-201917:32:32 IST Report Abuse

oceமைக்ரோ மேனேஜ்மெண்டு திட்டத்தின் கீழ் அந்த கட்சி பூத் ஏஜெண்டுகள் அடிக்கடி வாக்கு பெட்டிகள் உள்ள இடத்தை வந்து எட்டி எட்டி பார்த்து செல்ல அனுமதியா. இது பெரிய தொல்லையல்லவா. எதற்கு ஆக்கிய சோற்றை மாதக்கணக்கில் ஆறப் போடவேண்டும்.

Rate this:
J.Isaac - bangalore,இந்தியா
23-ஏப்-201910:17:24 IST Report Abuse

J.Isaacசீல் இருந்ததா இல்லையா என்று சாஹு பேட்டி கொடுப்பது தேர்தல் கமிசன் மீது சந்தேகத்தை உருவாக்குகிறது . நம்பகத்தன்மை குறைகிறது

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X