பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு திறமைக்கு பஞ்சமில்லை: மைதானம் அமைக்க அரசுக்கு நெஞ்சமில்லை!

Added : ஏப் 22, 2019
Advertisement
 விளையாட்டு திறமைக்கு பஞ்சமில்லை: மைதானம் அமைக்க அரசுக்கு நெஞ்சமில்லை!

கோவை,:''பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிப்புக்கு இணையாக விளையாட்டிலும் தனி, கவனம் செலுத்த வேண்டும். தொடர் பயிற்சியின் மூலம் ஞாபகசக்தி, ஒழுக்கம், கட்டுபாடு போன்ற செயல்கள் மேம்படும், '' என்கிறார்
கூடைப்பந்து வீராங்கனை செல்வமித்ரா.ஈரோடு, வெள்ளக்கோவிலை சேர்ந்த ரவிச்சந்திரன்- நளினி தம்பதியரின் மகள் செல்வமித்ரா, 21. 8ம் வகுப்பு படிக்கும் போது, நண்பர்களுடன் இணைந்து விளையாட்டுத்தனமாக கூடைப்பந்து விளையாட்டை துவங்கினார்.செல்வமித்ராவின் விளையாட்டு நுணுக்கம், பந்தை எடுத்து செல்லும் முறைகளை கவனித்த பயிற்சியாளர் ரவிச்சந்திரன், முறையான பயிற்சி அளித்தார். ஒரு வருட கடின பயிற்சியால், பள்ளி அணியில் இடம் பிடித்தார்.பின்னர், ஐந்து வருடங்களாக பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த, மாநில கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று, கோவை அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.
தேசிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 2011ம் ஆண்டு டில்லியில் நடந்த, இந்திய கூடைப்பந்து பயிற்சி முகாமுக்கு தேர்வானார். 2014ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இந்திய கூடைப்பந்து பயிற்சி முகாமிலும் பங்கேற்க தேர்வாகி அசத்தியுள்ளார்.பிறகு, கூடைப்பந்து பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் நடந்த போட்டியில், ஐந்து முறை தமிழக அணிக்காக பங்கேற்று, இரண்டு முறை மாநில அணிக்கு, வெற்றியை தேடி தந்துள்ளார்.தற்போது, சி.ஐ.டி., தொழில்நுட்ப கல்லுாரியில் படிக்கும் செல்வமித்ரா, கேள்விகளுக்கு சட் சட்டென்று பதிலளிக்கிறார்.* இன்றைய இளைஞர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி தெரிகிறதா?பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிப்புக்கு இணையாக, விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தொடர் பயிற்சிகள் மேற்கொள்ளும் போது ஞாபகசக்தி, ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற செயல்கள் மேம்படும். தோல்வியிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பதை, விளையாட்டு கற்று கொடுக்கிறது.* கூடைப்பந்து விளையாட்டில், பெண்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லையே...இந்தியாவில் கூடைப்பந்து விளையாட்டுக்கு, போதிய விழிப்புணர்வு இல்லை. திறமையான வீரர், வீராங்கனைகள் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அரசு தனி கவனம் செலுத்தினால், வீராங்கனைகளின் பங்களிப்பும் அதிகரிக்கும்.* விளையாட்டு வீரர்களின் சாதனைக்கு, பிரச்னையாக இருப்பவை ?தரமான விளையாட்டு மைதானம், சிறந்த பயிற்சியாளர்கள் அமைந்தால் விளையாட்டுத்துறையில் சாதனை படைப்பது எளிது.
இது தவிர, தரமான விளையாட்டு உபகரணம், உணவு, பயிற்சி இல்லாததால் சாதனை படைப்பது தடையாக உள்ளது.* கூடைப்பந்து வீரர்களுக்கு உங்கள் அட்வைஸ்?கூடைப்பந்து விளையாட்டில், வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தினமும் பயிற்சி எடுத்தால் மட்டும் போதது, விளையாட்டை பற்றிய தகவல்களை கற்றுக்கொள்ள வேண்டும்.இந்தியாவில் கூடைப்பந்து விளையாட்டுக்கு, போதிய விழிப்புணர்வு இல்லை. திறமையான வீரர், வீராங்கனைகள் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அரசு தனி கவனம் செலுத்தினால், வீராங்கனைகளின் பங்களிப்பும் அதிகரிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X