பதிவு செய்த நாள் :
ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கு
உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடில்லி: தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ஓட்டுக்கு அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஓட்டுக்கு பணம்,வழக்கு,உச்ச நீதிமன்றம்,தள்ளுபடி


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 18ல் நடந்து முடிந்தது.இந்த தேர்தலில், ஓட்டுக்கு அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டதாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

செய்யப்பட்டது.அதன் விபரம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகள் உட்பட, 70 தொகுதிகளை, அதிக பணம் செலவு செய்யப்படும் தொகுதிகளாக, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மட்டும், இதுவரை, 78 கோடி ரூபாய், பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், பல்வேறு நாளிதழ்கள் மற்றும் 'டிவி'க்களில், தமிழகத்தில், ஓட்டுக்கு அதிக அளவில் பணம் கொடுக்கப்படுவதாக, செய்திகள் வெளியானது. பண பலம் இருக்கும் கட்சிகள், சுலபமாக வெற்றி பெறுவதும், இல்லாதவர்கள் தோல்விஅடைவதும் தொடர்கிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தமிழக லோக்சபா தேர்தல் முடிவடைந்து விட்டது. எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.ஆனால், இந்த விவகாரத்தை, நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை உருவாகும் போது, நிச்சயம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு, அவர்கள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
23-ஏப்-201920:02:38 IST Report Abuse

balஇந்த சுடலையோட அடிமை தான் இந்த வழக்கு போட்டிருக்கும்....திமிர் பிடித்தவர்கள்.

Rate this:
பொன் வண்ணன் - chennai,இந்தியா
23-ஏப்-201910:44:59 IST Report Abuse

பொன் வண்ணன் ஹா.ஹா....இந்தியாவில் நீதி மன்றம் என்பது நீதியை நிலை நாட்ட என்று ...இன்னமும் நம்புவோம்....நம்புவோம்....நம்பிக் கொண்டே இருப்போம்...

Rate this:
23-ஏப்-201909:59:26 IST Report Abuse

ஆப்புநீதிபதிகளின் விளக்கம் அப்பிடியே புல்லரிக்குது... எங்கேயோ போயிட்டீங்க. இப்பிடியே போக்சோ குற்றவாளிகளையும் ஏதோ நடந்தது நடந்துப்போச்சுன்னு விடுதலை செஞ்சு நீதியை நிலை நாட்டுங்க.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X