வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது பைக், மொபைல்போன் பறிமுதல்

Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுச்சேரி:அரியாங்குப்பம் பாலத்தில் பொறியாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிள், மொபைல்போன் பறிமுதல் செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர்.அரியாங்குப்பம் சுப்பையா நகர், பாரதி வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி,39; அபிேஷகப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன். இருவரும் கடந்த 13ம் தேதி இரவு, 1:30 மணிக்கு அரியாங்குப்பத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி பைக்கில் சென்றனர்.அரியாங்குப்பம் புதுப்பாலம் அருகே சென்றபோது, எதிர் திசையில் இரண்டு பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், ராமமூர்த்தி மற்றும் ஜெயச்சந்திரனை தாக்கி அவரது பைக், மொபைல்போன் மற்றும் 5 கிராம் தங்க செயினை பறித்து சென்றனர்.இது குறித்து ராமமூர்த்தி அளித்த புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், வழிப்பறியில் ஈடுபட்டது முதலியார்பேட்டை பழைய மார்கெட் வீதியைச் சேர்ந்த தமிழ் (எ) தமிழ்செல்வம், 22; மற்றும் அவரது நண்பர்களான ரோடியார்பேட் தமிழ், முதலியார்பேட்டை கிரி, பெரியார் நகர் பிரேம் என்பது தெரியவந்தது. முதலியார்பேட்டை தமிழை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்து, வழிப்பறி செய்து பறித்து செல்லப்பட்ட பைக், மொபைல்போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மற்றொரு பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மூவரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஏப்-201908:56:28 IST Report Abuse
Srinivasan Kannaiya தொன்மை வாய்ந்த தமிழ் பேரை கெடுக்க தமிழ் (எ) தமிழ்செல்வம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X