விவசாயி தற்கொலை..,.,.| Dinamalar

விவசாயி தற்கொலை..,.,.

Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (1)

பாகூர்:விவசாயி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்த பின்னாச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்,73; விவசாய தொழிலாளி.வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த கிருஷ்ணராஜை அவரது மனைவி கண்டித்துள்ளார். அதன்பின், சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற கிருஷ்ணராஜ்மீண்டும் திரும்பவில்லை.இதனிடையே, நேற்று அதிகாலை அதே பகுதியில் மனை பிரிவில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிருஷ்ணராஜ் இருப்பது தெரியவந்தது.தகவறிந்தபாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணராஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு பொது மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்துஅவரது மகன் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X