சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவன் ஜலசமாதி ஆனதாக பரபரப்பு

Added : ஏப் 22, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 சிறுவன் ஜலசமாதி ஆனதாக பரபரப்பு

திருவண்ணாமலை : ஜல சமாதி ஆனதாகக் கூறி, அடக்கம் செய்யப்பட்ட சிறுவன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, கலெக்டர் கந்தசாமி முன்னிலையில், உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செண்பகத்தோப்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 52; ஆசிரியர். இவரது மகன் தனநாராயணன், 16, பத்தா-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தனநாராயணன், மனநிலை பாதித்தது போல், ஆன்மிக தியானத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். வலிப்பு நோயும் இருந்து உள்ளது.
சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை.இவர், மார்ச், 25 அதிகாலை, 12:45 மணி அளவில், வீட்டின் அருகில் இருந்த, 120 அடி ஆழ கிணற்றில், தவறி விழுந்தார். தீயணைப்பு துறையினர், சிறுவனை சடலமாக மீட்டனர். அப்போது, அந்த பகுதிக்கு வந்த பழனி என்ற சாமியார், தன நாராயணணின் கையை பிடித்து பார்த்து, சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டதாக கூறினார். இதையடுத்து, சித்தர்களை அடக்கம் செய்வது போல், சிறுவன் உடலை அடக்கம் செய்தனர். சிறுவனின் தந்தை அரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டதால், சந்தவாசல் போலீசார், வழக்கு பதிவு செய்தும், பிரேத பரிசோதனை செய்யாமல் இருந்து விட்டனர்.
தனநாராயணன் ஜலசமாதி ஆனதாக, சமூக வலைதளங்களில், சில நாட்களாக தகவல் பரவியது. இதையடுத்து, கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி முன்னிலையில், நேற்று பகல், 2:45 மணிக்கு, சிறுவனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அங்கேயே, அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர் கமலக்கண்ணன், உடற்கூறு ஆய்வு செய்தார். கலெக்டர் கந்தசாமி கூறுகையில், ''உடற்கூறு ஆய்வு அறிக்கை, 15 நாட்களுக்கு பின் கிடைக்கும். சிறுவன், நீரில் மூழ்கி இறந்துள்ளார். ஜலசமாதி அடையவில்லை. உடற்கூறு ஆய்வுக்கு பின், தவறான தகவலை பரப்பிய, சாமியார் பழனி மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
30-ஏப்-201920:31:10 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN என்னங்க இது பையன் மன நிலை பாதிக்கப்ட்டவன் . தவறி கிணற்றில் விழுந்து இறந்துவிட்டான் .இதை பெரிது படுத்தி வேலையற்ற வேலை என்பார்களே அதுபோல் அலைச்சல் உளைச்சல் எதற்கு. அந்த சாமியார் பெற்றோரை ஆறுதல் படுத்துவதற்காக க்கூட சொல்லி இருக்கலாம் எனவைத்து கொள்ளலாமே.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27-ஏப்-201919:43:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
24-ஏப்-201903:17:10 IST Report Abuse
Murugan ஆம் அந்த காணொளி அதிகம் பரவியது .என் நண்பர் கூட இதையெல்லாம் ஏன் இப்படி போடுகிறார்கள் என் மிகவும் வேதனை பட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X