அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எதிர்கட்சிகள் கோழைத்தனமாக
நாட்டை ஆண்டுள்ளன: மோடி

நந்தர்பார்: 'பயங்கரவாதத்தை ஒழிக்க, துணிச்சலான நடவடிக்கைகளை பா.ஜ., அரசு எடுத்துள்ளது. ஆனால், 70 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட எதிர்கட்சிகள், கோழைத்தனமாகவே செயல்பட்டுள்ளன' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

எதிர்கட்சிகள்,கோழைத்தனம்,நாட்டை ஆண்டுள்ளன,மோடி


மஹாராஷ்டிராவின் நாசிக் மற்றும் ராஜஸ்தானின் உதய்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், பிரதமர் நரேந்தர மோடி பேசியதாவது:இலங்கையில், மக்கள் ஈஸ்டர் திருநாளை கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தியாவில், 2014க்கு முன், என்ன நிலைமை?

மும்பை, புனே, ஐதராபாத், வாரணாசி, அயோத்தியா, ஜம்மு என, நாட்டின் பல்வேறு இடங்களிலும், குண்டு வெடிப்பு நிகழ்ந்தன. இதற்கு காங்கிரஸ் அரசு, என்ன நடவடிக்கை எடுத்தது? இரங்கல் கூட்டம் நடத்தி, பாகிஸ்தான் எங்கள் மீது தாக்குதல் நடத்தியது என, கண்ணீர் விட்டு கதறி அழுதது.

இதை மாற்றிக் காட்டியது, பா.ஜ., அரசு. நம்மை சீண்டிய பயங்கரவாதிகளின் கூடாரத்திற்குள் நுழைந்து, பாரபட்சமின்றி, அவர்களை முழுவதுமாக அழித்தது. தேசிய பாதுகாப்பு மற்றும் குடும்ப அரசியல் குறித்து நான் பேசினால், சிலருக்கு மின்சாரம் தாக்கியது போல் உள்ளது. நடந்துமுடிந்த இரண்டு கட்ட லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு கிடைத்த ஆதரவை கண்டு, எதிர்கட்சிகள் மிரண்டு போய் உள்ளன.

தே.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இடஒதுக்கீடுகளில் மாற்றம் செய்யப்படும் என, எதிர்கட்சிகள் வதந்தி பரப்பி வருகின்றன. பா.ஜ., அரசு ஆட்சியில் இருக்கும் வரை, அம்பேத்கர் கொண்டு வந்த இடஒதுக்கீட்டில்,

Advertisement

யாரும் கை வைக்க முடியாது. பிரதம மந்திரி விவசாயிகள் நலத்திட்டம் வாயிலாக, மஹாராஷ்டிராவில், 1.25 கோடி விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். விரைவில், விவசாயிகளுக்கான, 'பென்ஷன்' திட்டம் நடைமுறைபடுத்தப்படும்.

இந்த நாட்டில், நேர்மையான அரசாங்கத்தை நடத்த முடியும் என்பதை, தே.ஜ., கூட்டணி அரசு நிரூபித்து உள்ளது. காங்., அரசு, 70 ஆண்டுகளாக, மக்களை ஏமாற்றி வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
23-ஏப்-201920:09:36 IST Report Abuse

தோலுரிப்பவன் அப்படியே பாக்கிஸ்தான் சிறையிலிருக்கும் ஜாதவ் அவர்களையும் மீட்டுக்கொண்டு வருவது தானே. அதற்கு ஏவுகணைகள் இல்லையா? சீன ஆக்கிரமிப்பு நடந்த போது ஒரு துப்பாக்கி வெடி கூட வெடிக்க மறந்தது ஏன் மாயவினோதா..?? நோஞ்சான் நாடு பாக்கிஸ்தான் மட்டும்தான் நம்ம எதிரியா பரந்தாமா..?? இது என்ன வீரமா

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-ஏப்-201915:09:23 IST Report Abuse

Pugazh Vம.அரசின் பாதுகாப்புத் துறை வெளியிட்ட புள்ளி விவரம் சொல்வது, கடந்த 5 ஆண்டு களில் தான் தீவிர வாத தாக்குதல் களும் மரணங்களும் அதிகம் என்று சொல்கிறது. உள்ள பூந்து டிரக்குகள் உள்பட 40 பேரைத் தூக்கினானுங்க. யாருமே இல்லாத மலை உச்சியில் நாலு குண்டு போட்டு விட்டு அதை போட்டோ வேற.எடுத்து... தேர்தலில் பயன்படுத்தும் கேவலமான காரியத்தை எவருமே செய்ய மாட்டார்கள். செய்யவும் கூடாது. ஆனால் இவரும் இவரது கட்சி யும் செய்கிறது. 2011 லேயே காங்கிரஸ் ஆட்சி யின் போது, ஸர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியது. கூகிளில் தான் பார்த்தேன். ஆனால் எந்த தேர்தலிலும் இதைச் சொல்லி காங்கிரஸ் வாக்கு சேகரித்ததில்லை. கசாப் தூக்கிலிடப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சி யில் தான். இன்னுமா காங்கிரஸ் பேரைச் சொல்லி வாக்கு கேட்கிறார்???

Rate this:
blocked user - blocked,மயோட்
23-ஏப்-201919:57:20 IST Report Abuse

blocked userபொய்யான தகவல்களை தருவதை நிறுத்தவும் - பொய் தகவல்களை பரப்புவது தண்டனைக்கு உரிய குற்றம்...மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் எத்தனை தீவிரவாத தாக்குதல் நடந்து இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்... ...

Rate this:
M.SHANMUGA SUNDARAM - TUTICORIN,இந்தியா
23-ஏப்-201914:45:41 IST Report Abuse

M.SHANMUGA SUNDARAMஐயா வருவதற்கு முன்னும் இந்தியா பாதுகாப்பாக இருந்தது. போன பின்னும் இருக்கும். எனவே பாதுகாப்பு தவிர வேறு எதாவது பேசுங்களேன். வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, விவசாயிகள் முன்னேற்றம் பெண்கள் பாதுகாப்பு, நிர்வாக சீர்திருத்தம், என பல விஷயங்கள் எங்கே போயின ஐயா மோடி அவர்களே.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X