அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., வேட்பாளர்கள்
தலைவர்கள் மல்லுக்கட்டு

சென்னை: இடைத்தேர்தல் நடக்க உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும், தங்கள் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக்க, அ.தி.மு.க.,வின் முன்னணி தலைவர்கள் முட்டி மோதியதால், வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தாமதமானது.

admk, அ.தி.மு.க., வேட்பாளர்கள்,தலைவர்கள்,மல்லுக்கட்டு


தமிழகத்தில், சூலுார், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, அ.தி.மு.க., மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள,

கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், முதல்வர், இ.பி.எஸ்., - துணை முதல்வர், பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

'திருப்பரங்குன்றம் தொகுதியில், தன் ஆதரவாளர் போட்டியிட வேண்டும்' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் விருப்பம் தெரிவித்து உள்ளார். முன்னாள், எம்.எல்.ஏ., முத்துராமலிங்கம், மதுரை எம்.பி., கோபாலகிருஷ்ணன், சினிமா பைனான்சியர், அன்புசெழியன் ஆகியோரும், இந்த தொகுதியில், 'சீட்' பெற முட்டி மோதினர். மறைந்த, ஏ.கே.போஸ் மனைவி அல்லது மகனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என, மதுரை மாவட்ட நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.

சூலுார் தொகுதியில், மறைந்த கனகராஜ் சகோதரருக்கு, சீட் தர வேண்டும் என,கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த, அமைச்சர் ஒருவர் வலியுறுத்தினார். ஆனால், முன்னாள் அமைச்சர், செ.ம.வேலுசாமியும் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார்.

Advertisement

கரூர், அ.தி.மு.க., வேட்பாளர், தம்பிதுரை, அரவக்குறிச்சி தொகுதியில், தன் ஆதரவாளருக்கு சீட் கொடுக்க பரிந்துரை செய்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி அடைந்த செந்தில்நாதனும், சீட் கேட்டுள்ளார். மாநில பேச்சாளர், நிர்மலா பெரியசாமி போட்டியிட வேண்டும் என, அமைச்சர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ளனர். இப்படி, தலைவர்கள் அனைவரும் தங்களின் ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி கொடுக்க மல்லுக்கட்டியதால், வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தாமதமானது.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஏப்-201908:34:32 IST Report Abuse

Srinivasan Kannaiyaதலை சரி இல்லை என்றால் இதுதான் கெதி

Rate this:
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
23-ஏப்-201905:00:38 IST Report Abuse

அசோக்ராஜ் திமுகவை ஜெயிக்க வைத்தே தீருவது என்று சபதம் செய்து விட்டார்களோ?

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
23-ஏப்-201901:45:17 IST Report Abuse

அன்புதேர்தலில் தனது ஆதரவாளரை நிறுத்தி, அவர் மூலம் எடப்பாடியிடம் இருந்து பணம் கறந்து, கமிஷன் அடிக்கவே இந்த போட்டி. ஏனனில் மக்கள் பணத்தை வாங்கி கொண்டு, அதிமுகவிற்கு ஒட்டு போட மாட்டார்கள் என்று நன்றாக தெரிவதால், பணத்தை கொடுத்து ஏன் ஏமாற வேண்டும்? பணம் கொடுத்துவிட்டோம் என்று வெறும் எடப்பாடியை மட்டும் ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். ஆட்சி முடிவதற்குள், ஒரு தொகையை ஆட்டையை போடுவது தான் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X