சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மதுரை ஓட்டு எண்ணிக்கை மைய சர்ச்சை
பெண் தாசில்தார் சிக்கியதில், 'அரசியல்'

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த பெண் தாசில்தார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பின்னணியில், அரசியல் இருப்பது தெரிந்துள்ளது.

மதுரை,ஓட்டு எண்ணிக்கை,சர்ச்சை,பெண் தாசில்தார்,சிக்கியதில், அரசியல்


இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: மதுரையில், அதிகார பலமிக்க, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர், லோக்சபா தொகுதியின், ஒரு சட்டசபை தொகுதியை தேர்வு செய்து, அக்கட்சியின் வேட்பாளர், ராஜ்சத்யன் வெற்றிக்கு உழைத்தார். அத்தொகுதியில், பணப் பட்டுவாடா பொறுப்பையும் ஏற்றார்.

ஒரு ஓட்டுக்கு, 300 ரூபாய் வீதம் பணம் கொடுக்க திட்டமிட்டார். வார்டு நிர்வாகிகள் மூலம், பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

இதனால், கணிசமான வாக்காளர்கள், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிப்பர் என, கணக்கு போட்டார். ஆனால், அத்தொகுதியின்ஓட்டுப்பதிவு சதவீதம், அவரை துாக்கி வாரிப்போடச் செய்தது. 'இத்தனை பேருக்கு பணம் கொடுத்தோம்' என, வார்டு நிர்வாகிகள் கூறிய எண்ணிக்கையை விட, பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை, மிக குறைவாக இருந்தது. இதனால், 'பணத்தை பட்டுவாடா செய்யாமல், நிர்வாகிகளே பதுக்கி இருக்கலாம்' என, அந்த நிர்வாகி சந்தேகம் அடைந்தார்.

யார், யார் எவ்வளவு பணத்தை பதுக்கினர் என்பதை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து, மீண்டும் பணத்தை பெற முடிவு செய்தார். இதற்காக, 'பூத்' வாரியாகபதிவான ஓட்டுகள் விபரம், அவருக்கு தேவைப்பட்டது. இப்பட்டியலை, மாவட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் அவர் கோரினார். அந்த அதிகாரியோ, தனக்கு கீழ்நிலை அதிகாரி

Advertisement

ஒருவரிடம், பொறுப்பை ஒப்படைத்தார். அந்த அதிகாரி களம் இறங்காமல், தாசில்தார் சம்பூர்ணத்திடம், அப்பணியை மேற்கொள்ள பணித்தார்.

உயர் அதிகாரி கட்டளையிட்டதால், அவரும் ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு சென்று, ஆவணங்களை நகல் எடுத்தார். இறுதியில் அவரும், அவருடன் சென்ற மூன்று ஊழியர்களும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு பலிகடா ஆகி இருக்கின்றனர்.அதிலும், நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்த தாசில்தார் சம்பூர்ணம், தன் துணை கலெக்டர் பதவி உயர்வை பறிகொடுத்து நிற்கிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Rajendran Thangavel - Dindigul ,இந்தியா
27-ஏப்-201914:10:58 IST Report Abuse

Dr Rajendran ThangavelShe does not deserve the position that she is occupying and this kind of childish behaviour is not expected of her. Her superior who directed her in this act also must be suspended on the strenght of her statement and proceeded with. This inciudent also throws light on the incompetence and irresponsibility of the officers of the revenue department which is the backbone of the governance. Officers of such incompetence must be sacked from service without any mercy.

Rate this:
Gnanam - Nagercoil,இந்தியா
26-ஏப்-201915:38:51 IST Report Abuse

Gnanamதகாசில்தார் சம்பூர்ணம் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு பணிந்தார். தப்பான செயல்தான் இருப்பினும் பணிவு அவரை மாற்றிவிட்டது. சிறிய தண்டனை அவருக்கும், பெருந்தண்டனை உயர் அதிகாரிகள் யாரானாலும் நிச்சயம் கொடுக்கப்படவேண்டும்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-ஏப்-201908:12:41 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X