எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'குண்டாஸ்' :
சர்ச்சை ஆடியோ வெளியிட்டால், 'குண்டாஸ்':
போலீசார் கடும் எச்சரிக்கை

'பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட, சமூக வலைதளங்களில், ஜாதி, மத கலவரங்களை துாண்டும் வகையில், ஆடியோ, வீடியோ வெளியிடுவோர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

சர்ச்சை ஆடியோ வெளியிட்டால், 'குண்டாஸ்' :போலீசார் கடும் எச்சரிக்கை

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் நடந்த, ஏப்ரல்,18ல், ஒரு சமுதாய பெண்களை இழிவுபடுத்தி, ஜாதி கலவரத்தை துாண்டும் வகையில் பேசிய, 'ஆடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இந்த ஆடியோ, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில், பெரும் கலவரம் ஏற்படவும் காரணமானது.போலீசார் மற்றும் பொது மக்கள் மண்டை உடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு என,பொன்னமராவாதி மற்றும் அதை சுற்றியுள்ள, 30 கிராமங்களில்,


மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலைஏற்பட்டது.

பதற்றம்
தற்போது, இயல்பு நிலை திரும்பிவிட்டது என, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறினாலும்,பொன்னமராவதி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், நீறு பூத்த நெருப்பு போல, பதற்றம் நீடிக்கிறது.இதனால், மத்திய மண்டல, ஐ.ஜி., வரதராஜு தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, அரியலுார் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்திலும், சிறிய அளவில் நடந்த மோதல் சம்பவம் பெரிதுபடுத்தப்பட்டு கலவரமாக வெடித்தது.இச்சம்பவத்தை மையப்படுத்தியும், வட மாவட்டங்களில், ஜாதி கலவரம் ஏற்படும் வகையிலும், சிலர் விஷமத்தனமான கருத்துகளை பரப்பிவருகின்றனர்.இதனால், தமிழகம் முழுவதும்உள்ள, போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி., அலுவலகங்களில், சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்க, சிறப்பு குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன.அதேபோல

Advertisement

, டி.ஜி.பி., அலுவலகத்தில், உளவு போலீசாரும், சமூக வலைதள கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குற்றம்


இது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள்கூறியதாவது:தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, 'வாட்ஸ் ஆப்; பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், சர்ச்சைக்குரிய, ஆடியோ, வீடியோ மற்றும் கருத்துகளை பதிவிடுவது, தண்டனைக்குரிய குற்றம்.தனி மனித தாக்குதல் மற்றும் ஜாதி, மத கலவரத்தை துாண்டும் வகையில், சர்ச்சைக்குரிய ஆடியோ, வீடியோ மற்றும் கருத்துகளை பதிவிடுவோர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
23-ஏப்-201905:19:38 IST Report Abuse

அசோக்ராஜ் நாடக காதல்களை தடை செய்தாலே முக்கால்வாசி கலவரங்களுக்கு உயிர் இருக்காது. 30 வயது வரை திருமணம் செய்வோருக்கு பெற்றோர் சம்மதம் கட்டாயம் என்று சட்டத் திருத்தம் செய்தால் போதும். காலிகளை அப்புறப்படுத்த முடியும்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X