பொது செய்தி

தமிழ்நாடு

கோடை மழையால் குளிர்ந்த பூமி

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (5)
Advertisement

சென்னை : தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.


தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது வலுப்பெற்று தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. சில இடங்களில் 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் நேற்று (ஏப்.22) முதல் 25ம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தது.


மாவட்ட பகுதிகள் வாரியாக


மேற்கு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், வெலிங்டன் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஆத்தூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் , ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி பகுதிகளில் மழை பெய்வதால் பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

தென் மாவட்டங்களான மதுரையில் மேலுார், அழகர்கோவில் பகுதியில் பலத்த மின்னலுடன் மழை பெய்ததில் தியாகராஜன் என்பவர் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை ,அம்பாசமுத்திரம், கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கன்னியாகுமரியில் தக்கலை, அழகிய மண்டபம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஜெயமங்கலம், லட்சுமிபுரம் வடுகபட்டி பகுதிகள் மற்றும் திண்டுக்கல்லில் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

வடக்கு பகுதியில் சென்னை , திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. திருவண்ணாமலையில் மழை பெய்ததில் வேப்பமரம் கார் மீது விழுந்தது. பலத்த காற்று காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேலூர், வாணியம்பாடியிலும் பரவலாக மழை பெய்தது.

இதர பகுதிகளான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பாவக்கல், காரப்பட்டு பகுதிகளிலும், தர்மபுரியின் பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம் போன்ற சில பகுதிகளிலும் , புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் உள்ளிட்ட 20 கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது.


தண்ணீர் பஞ்சம் வராது :


கோடை காலம் துவங்கியுள்ளநிலையில் தற்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரத்தை சமாளிக்க முடியாமல் திணறும் நிலையில் இந்த ஆண்டு பெய்யும் கோடை மழையால் வெப்பம் தணியும். பூமி குளிர்ச்சியாக இருக்கும். தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்கும் என்று மக்கள் மகிழ்ச்சியுடன் எண்ணத் துவங்கியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathu - bangalore,இந்தியா
23-ஏப்-201912:33:35 IST Report Abuse
sathu நாமக்கல் மாவட்டமும் தமிழ் நாட்டில் தான் இருக்கிறதா? ஏன் அங்கு மழையே பொழியவில்லையா....
Rate this:
Share this comment
Cancel
Sivak - Chennai,இந்தியா
23-ஏப்-201912:07:30 IST Report Abuse
Sivak மழை நீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .... இலவசங்களை அறிவிக்கும் அரசியல் வியாதிகள் ஒடுக்க பட வேண்டும் ... அடுத்த தலைமுறை உயிர்ப்புடன் இருக்க தண்ணீர் சேமிப்பு இன்று அதிக முக்கியம் ...
Rate this:
Share this comment
Cancel
Sivaligam - Chennai,இந்தியா
23-ஏப்-201909:34:29 IST Report Abuse
Sivaligam we need to make a strict rule to 100% saving of rain water in all government institution, private companies, malls. shopping complex and even in houses. Unless we make this nobody will care to save water and drill deep 500 feets to water
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X