சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐஸ்கிரீம் சாப்பிட்டகுழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 ஐஸ்கிரீம் சாப்பிட்டகுழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

மயிலாடுதுறை, : வானகிரி மீனவ கிராமத்தில் நேற்று நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவில், ஐஸ்கிரீம் சாப்பிட்ட, 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வானகிரி மீனவ கிராமத்தில், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் காளியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அங்கு விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிரீம்களை, குழந்தைகள் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
இதில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள், சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக, விசாரணை நடத்திய பூம்புகார் போலீசார், சீர்காழி, வல்லம் படுகை, திருவெண்காடு பகுதிகளில் தயாரிக்கப்பட்டு, கோவில் திருவிழாவில் விற்பனை செய்த, ஐந்து கம்பெனிகளின் விற்பனையாளர்களிடம் ஐஸ்கிரீம்களை பறிமுதல் செய்தனர்.
அவற்றை ஆய்வுக்கு அனுப்பி, அதன் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தாசில்தார், சபிதாதேவி மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
23-ஏப்-201909:13:48 IST Report Abuse
venkatan உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டம் இந்தியா முழுமைக்கும் முறையாகவும் கண்டிப்பாகவும் அமுல் படுத்தப்படுவதில்லை.ஹோட்டல் சாப்பிட அமர்ந்தால், மூலப்பொருளில் கலப்படம்,தயாரிப்பில் தொடங்கி பயனர் வரை சுகாதாரம் கண்காணித்து நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. சுய சுத்தம்,உபகரணங்கள் சுத்தம், சுற்றப்புற சுத்தம் என்பன பெரிய கேள்விக்குறி சமையலறை என்பது ஆப்பரேஷன் தியிட்டேர் க் கு இணையான சுத்தம் கடைபிடிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஏப்-201908:54:37 IST Report Abuse
Srinivasan Kannaiya இதையும் நகராட்சி/கிராம சுகாதார ஆய்வாளரிடம் காட்டி சாப்பிட உகந்ததுதான் என்று அத்தாட்சி வாங்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X