சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லில் சுவர் இடிந்து விழுந்து

Added : ஏப் 23, 2019
Advertisement

நாமக்கல் : நாமக்கல், தனியார் மருத்துவமனையை ஒட்டி வைக்கப்பட்டிருந்த விளம்பர சுவர், சூறைக்காற்றில் இடிந்து விழுந்ததில், பெண் டாக்டர் உட்பட, இருவர் பலியாகினர்.நாமக்கல், திருச்சி சாலையில் தனியார் மருத்துவமனை உள்ளது. இதனருகில் உள்ள உணவகத்தை, பாலகிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக, நாமக்கல்லில், காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. நேற்று மாலை, 4:30 மணிக்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.அப்போது, அவ்வழியாக வந்த பெண் டாக்டர் கலா, 56, மழைக்காக, உணவகம் அருகில் ஒதுங்கினார்.
அங்கு, மருத்துவமனையைச் சேர்ந்த டிரைவர் மோகன்ராஜ், 39, உட்பட, ஐந்து பேர் நின்றிருந்தனர்.பலத்த காற்று வீசியதில், உணவகத்தின் மேலிருந்த விளம்பர பேனர் கட்டும் இரும்பு சாரமும், சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. அப்போது, உணவகத்தின் மேற்கூரையும் திடீரென சரிந்தது.அதில், கலா, மோகன்ராஜ் இருவரும் இடிபாடுகளில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உணவக உரிமையாளர், பாலகிருஷ்ணன், 70 உட்பட ஐந்து பேர், படுகாயமடைந்தனர். அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.விபத்தில் பலியான கலா, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர், செல்வக்குமார், 58, என்பவரின் மனைவி. நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X