பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் தலைப்பு ஓர் விளக்கம்

Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 தினமலர் தலைப்பு  ஓர் விளக்கம்

நேற்றைய தினமலர் நாளிதழில் 'ஓ சேசப்பா!' என்ற தலைப்பின் கீழ் இலங்கை துயர சம்பவம் குறித்து செய்தி, சில பதிப்புகளில் வெளியானது. அந்த தலைப்பு சரியல்ல என்று வாசகர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். கொடுமையான சம்பவம் நடந்து பெருமளவில் உயிர் இழப்பு நேரும்போது, 'கடவுளே... இது என்ன கொடுமை?' என்று மக்கள் குமுறுவது இயல்பு. கிறிஸ்தவர்களாக இருந்தால் 'ஓ ஆண்டவரே' அல்லது 'இயேசுவே' என்று சொல்லக்கூடும். 'சேசப்பா' என்பது இலங்கையில் வாழும் தமிழ் கிறிஸ்தவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை. அந்த அடிப்படையில், ஒரு கிறிஸ்தவரின் குமுறலை எதிரொலிக்கும் விதமாகத்தான் அந்த தலைப்பு இடப்பட்டிருந்தது. மற்றபடி யாரையும் கேலி செய்வதோ, யார் மனதையும் புண்படுத்துவதோ தினமலர் நோக்கம் கிடையாது.அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு குறுகிய வட்டத்துக்குள்ளும் சிக்கிவிடாமல் தேச சேவையிலும் மக்கள் பணியிலும் ஈடுபட்டு வருகிற தினமலர் பற்றி நாட்டுக்கே தெரியும். இருந்தாலும், மேற்படி தலைப்பு தங்கள் மனதை புண்படுத்தி விட்டதாக யாரேனும் கருதினால், அதற்காக மிகவும் வருந்துகிறோம்.-வெளியீட்டாளர், தினமலர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumaran - chennai,இந்தியா
23-ஏப்-201923:24:44 IST Report Abuse
Kumaran அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு குறுகிய வட்டத்துக்குள்ளும் சிக்கிவிடாமல் அடேங்கப்பா ஆண்ட புளுகு ஆகாசப் புளுகு. you are one sided most of the time. On central you support BJP like anything and in state AIADMK
Rate this:
Share this comment
Cancel
GEORGE - THOOTHUKUDI,இந்தியா
23-ஏப்-201917:12:09 IST Report Abuse
GEORGE உங்கள் நெல்லை பதிப்பின் தலைப்பு மாற்றி இருந்தது என்?? தென்மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் அதிகம் என்பதாலா?? பிற மதத்தவரை வெறுத்தல், ஆம் நங்கள் அப்படித்தான் என்று நேர்மையுடன் சொல்ல்லுங்கள். நல்லவன்போல வேஷம் வேண்டாம்
Rate this:
Share this comment
sheela - ,
23-ஏப்-201923:38:40 IST Report Abuse
sheelasir, even though if there language is like that ...As u had explained everytime r u posting Sri Lankan tamil language as same as now u had posted. hereafter, news relating to srilanka post as how they speak... than we can say that dinamalar is the newspaper..( they post as wat and how people are communicating with them )...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X