வயதை குறைத்து காட்டும் அரசியல் தலைகள்; 6 ஆண்டில் 9 வயது கூடிய வீராங்கனை

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (11)
Advertisement

ஒவ்வொருவருக்கும், ஓர் ஆண்டு முடிந்தால், ஒரு வயது கூடும்; இது தான் இயற்கையான கணக்கு. ஆனால், நடிகர், நடிகையர், அரசியல்வாதிகளுக்கு மட்டும், இந்த கணக்கு தப்புக்கணக்காகவே இருக்கிறது.


இந்த தேர்தலிலும், இந்த தப்புக்கணக்கு அம்பலமாகியுள்ளது. சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு, சில ஆண்டுகளில் வயது கூடுவதற்கு பதில், குறைந்து காணப்பட்டுள்ளது. அவர்களின் இளமை தன்மையோ, செயல்பாடுகளோ, இயல்பானதை விட பல மடங்கு வயதை அதிகரித்துள்ளது; ஆவணங்களில் மட்டும் வயது குறைந்துள்ளது.

ராஜஸ்தானின், பார்மர் தொகுதியின், காங்., வேட்பாளர், மன்வேந்த்ர சிங்கின் வயது, 11 ஆண்டு இடைவெளியில், அவருக்கு, ஒன்பது வயதுகளே அதிகரித்துள்ளது. மீதமுள்ள, இரண்டு ஆண்டுகள் எங்கே போனது என, அவருக்கே தெரியவில்லை.


மாயமானது:


ஆல்வார் தொகுதியின், காங்., வேட்பாளர், பன்வார் ஜிதேந்திர சிங், 2009ல் தன் வயதை, 38 என, குறிப்பிட்டுள்ளார். தற்போது, 10 ஆண்டுகளுக்கு பின் வயதை, 47 என்றே குறிப்பிட்டுள்ளார். ஒரு வயது அவருக்கு மாயமாகி விட்டது.இதேபோல், சிகார் தொகுதி, காங்., வேட்பாளர், சுபாஷ் மஹாரியா, சுயேச்சை வேட்பாளர், அஞ்சு தன்கா, பா.ஜ,வின் தவ்சா தொகுதி வேட்பாளர், ஜஸ்கார் மீனா ஆகியோரும், தங்கள் ஆவணங்களில் ஒரு வயதை குறைத்து கூறியுள்ளனர்.

சிலர், வயதை குறைத்து சொல்வது, ஒரு புறம் இருந்தாலும், சிலர், வயதை கூடுதலாகவும் குறிப்பிட்டு, சர்ச்சையில் சிக்கியுள்ளனர். ஜெய்ப்பூர் ஊரக தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், வட்டு எறிதல் வீராங்கனையுமான, கிருஷ்ண புனியா, சிக்கலில் மாட்டியுள்ளார். அவர், ஆறு ஆண்டுகளுக்கு முன் கொடுத்த ஆவணத்தில் இருந்த வயதை விட, தற்போது தாக்கல் செய்த ஆவணத்தில், ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஆறு ஆண்டுகளில், ஆறு வயது தானே கூடும். அது எப்படி, ஒன்பது வயது கூடும் என, பலரும் வியப்பாக பார்க்கின்றனர். அவர், 2013ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஆவணத்தில், தனக்கு, 30 வயதாக குறிப்பிட்டிருந்தார்.


கிண்டல்:


தற்போது, ஆறு ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த தேர்தலின் ஆவணத்தில், 39 வயது என, கூறியுள்ளார். அவர், 2013 சட்டசபை தேர்தலில் குறிப்பிட்ட வயது சரியாக இருக்கும் என்றால், ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது அவரது வயது, 36, என்று தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், மூன்று வயதை அதிகமாக குறிப்பிட்டுள்ளார். இது எப்படி என, அவரது சக விளையாட்டு வீரர், வீராங்கனைகளே கிண்டல் அடிக்கின்றனர்.

- ஆபா சர்மா -
சிறப்பு செய்தியாளர்

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
23-ஏப்-201912:23:49 IST Report Abuse
DSM .S/o PLM வயதும் தவறு, சொத்து விபரமும் தவறு, பெயரும் தவறு... ஏன் மேடையில் பேசியதும் தவறு என்று நேற்றுதான் ஒரு பெரிய்ய்யய்யய்ய கட்சியின் தலைவர் நீதி மன்றத்தில் மன்னிப்பு கேட்டார். தவறில் பிறந்து தவறில் வளர்ந்த தலைவர் பெருமானே .. சுதந்திர தினத்தை ஜனவரியில் டிசம்பரில் தேடிக்கொண்டிருப்போர், திருப்பூரில் கடலைத்தேடி துறைமுகம் அமைக்க கடற்கரையும் தேடிக்கொண்டிருப்போர் தலைவராக இருக்கும் நாட்டில் இதெல்லாம் சகஜம்.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
23-ஏப்-201912:05:39 IST Report Abuse
சுந்தரம் வயது பிரச்சினையில் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு கட்சியை சார்ந்தவர்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு குறுகிய வட்டத்துக்குள்ளும் சிக்கிவிடாமல் தேச சேவையிலும் மக்கள் பணியிலும் ஈடுபட்டு வருகிற பெருமையை பறை சாற்றுகிறது.
Rate this:
Share this comment
காவல்காரன்: சுடலைபிஜேபி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் பற்றி விபரம் இருக்கிறதே. சரியாக படிக்கவில்லையா? அதிகமான நேரம் செலவழித்து கருத்து போட வேண்டாம். உடல் நலம் குன்றி விடும்....
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-ஏப்-201908:05:08 IST Report Abuse
Natarajan Ramanathan ஒரு வயது வித்யாசம் தவறல்ல. ஒருவர் 23.4.1990 அன்று பிறந்திருந்தால் நேற்று வரை 28 வயது என்றும் இன்று 29 வயது என்றும் குறிப்பிடுவதுதான் சரியானது. எனவே வேட்புமனு அளிக்கும் தேதியில் என்ன வயதோ அதை குறிப்பிடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X