பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (25)
Advertisement

திருப்பதி: ''சென்னை, பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து, திருமலைக்கு, தங்கக் கட்டிகள் கொண்டு வந்த விஷயத்தில், தேவஸ்தானம் தன் கடமைகளை சரிவர செய்துள்ளது'' என, தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த போது, பறக்கும் படையினர் சோதனையில், ஏராளமான பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், இதே போல, பறக்கும் படையினரால், பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி, அனில் குமார் சிங்கால், நேற்று திருமலையில், நிருபர்களிடம் கூறியதாவது: 'திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள தங்கக்கட்டிகளை, வங்கிகளில் முதலீடு செய்ய வேண்டும்' என, 2006ம் ஆண்டு, ஏப்., 1ம் தேதி, ஆந்திர அரசு உத்தரவிட்டது. அதன்படி, தற்போது, 5,387 கிலோ தங்கம், பாரத ஸ்டேட் வங்கியிலும், 1,381 கிலோ தங்கம், பஞ்சாப் நேஷனல் வங்கியிலும், 1,930 கிலோ தங்கம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், முதலீடு செய்யப்பட்டன. மீதம் உள்ள, 553 கிலோ தங்கம், தேவஸ்தான கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள தங்கம், ஏப்., 18ம் தேதி முதிர்வு அடைந்தது. அதை தேவஸ்தானத்திடம் சேர்க்க வேண்டியது, வங்கி அதிகாரிகளின் பொறுப்பு. ஆனால், தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமலில் இருந்த நாட்களில், அந்த தங்கம் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டதால் பிரசனை எழுந்தது. இதுகுறித்து, ஆந்திர தலைமை செயலர், எல்.வி. சுப்ரமணியம், வரும், 23ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, தேவஸ்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

திருப்பதியிலிருந்து, வங்கிகளுக்கு, தங்கம் முதலீடு செய்ய எடுத்துச் செல்லும் போது மட்டுமே, அது தேவஸ்தானத்தின் பொறுப்பு. முதலீடு முதிர்வு அடைந்தவுடன், அதை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு, வங்கி அதிகாரிகளுக்கு உரியது. இதில் தேவஸ்தானம், தன் கடமையை சரிவர செய்துள்ளது. இந்த விளக்கம், ஆந்திர தலைமை செயலருக்கும் அனுப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
23-ஏப்-201917:21:48 IST Report Abuse
vnatarajan தேர்தல் விதி முறைகள் அமலில் இருக்கும்போது ஏன் தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு அவர்களுடைய பெர்மிஷன் மேல் வாங்கி எடுத்து செல்லலாமே. அப்படி செய்யாதது வங்கியின் தவறுதான்
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
23-ஏப்-201912:34:16 IST Report Abuse
Ramalingam Shanmugam சர்வ சாதாரணமாக கொண்டுசெல்கிறார்கள் தீவிர விசாரணை தேவை
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
23-ஏப்-201911:45:10 IST Report Abuse
Indhuindian Poll dates were announced long ago. The code of conduct is well known even to illiterate. The maturity of the Gold Deposit was known even at the time of deposit. The TTD cannot simply pass the buck saying it is the responsibility of the bank to hand it over to TTD at Thirumla. It is a moot and simplified argument. Cannot they warn the bank about the operation of the code of conduct and the need to have formal documentation for safe transportation with adequate security deployed. Was the consignment insured or simply left to God to save his assets. Something is murkier and more than what meets That it was done just few weeks before the counting in Andhra and the large scale allegations against the TTD by the then Chief Archaka also puts the deal under a cloud.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X