இலங்கை குண்டுவெடிப்பு: கர்நாடகாவைச் சேர்ந்த ஏழு பேர் பலி

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (31)
Advertisement
இலங்கை,குண்டுவெடிப்பு,கர்நாடகா,ஏழு பேர்,பலி

புதுடில்லி: இலங்கையில் நேற்று முன்தினம் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் கர்நாடகாவைச் சேர்ந்த ஏழு பேர் பலியான தகவல் தெரியவந்துள்ளது. இவர்களில் ஐந்து பேர் ஆளும் மதச் சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர மங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணும் பெங்களூரைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவரது சகோதரரும் இதில் பலியாகியுள்ளனர். 'மேலும் இரண்டு பேரை காணவில்லை' என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக முதல்வரும் மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி கூறியதாவது: விடுமுறையை கொண்டாடுவதற்காக எங்கள் கட்சியை சேர்ந்த சிலர் இலங்கை சென்றிருந்தனர்.
அவர்களில் சிலர் பலியாகி விட்டதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய துாதரகத்தை தொடர்பு கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


உதவிக்கரம் நீட்டுகிறது 'இன்டர்போல்' அமைப்பு:


இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக சர்வதேச போலீஸ் அமைப்பான 'இன்டர்போலின்' பொதுச் செயலர் சர்ஜன் ஸ்டாக் கூறியதாவது: இலங்கையில் நடந்த தாக்குதல்கள் மிக கொடூரமானவை. இதற்கு இன்டர்போல் தரப்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
இந்த விஷயத்தில் இலங்கை புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம். இலங்கைக்கு சிறப்பு விசாரணை குழுவையும் அனுப்ப தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


டென்மார்க் கோடீஸ்வரரின் மூன்று குழந்தைகள் பலி:
டென்மார்க்கைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஆண்டர்ஸ் கோல்ச் பாவ்ஸ்லென் 46. ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான ஜவுளிக் கடைகள் இவருக்கு சொந்தமாக உள்ளன. பிரிட்டன் நாட்டிலும் இவருக்கு ஏராளமான எஸ்டேட்டுகள் உள்ளன. ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி இவர் தன் குடும்பத்தினருடன் இலங்கைக்கு வந்திருந்தார். குண்டு வெடிப்புகளில் இவரது நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பலியாகினர்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஏப்-201921:11:14 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் மத சார்பற்ற கட்சி ஆளுங்க என்பதுதான் பரிதாபம்.
Rate this:
Share this comment
Cancel
Mudhalvan - Sydney,ஆஸ்திரேலியா
23-ஏப்-201917:23:21 IST Report Abuse
Mudhalvan DANDY இதில் சந்தேகத்திற்கிடமான 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து இலங்கை அரசு செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்னா கூறியதாவது: குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம், தீவிர விசாரணை நடந்து வருகிறது. இலங்கையைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புக்கு, இந்த குண்டு வெடிப்பில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இந்த குண்டு வெடிப்புகளில் பெரும்பாலானவை தற்கொலை படை தாக்குதல்களே. மனித வெடிகுண்டாக ஏழு பேர் செயல்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே இலங்கையைச் சேர்ந்தவர்கள் தான். tell me about this line its from Dinamalar paper just now release. dont speak if you dont know anything
Rate this:
Share this comment
Cancel
23-ஏப்-201915:25:13 IST Report Abuse
bugindia JDS party people dead in srilanka?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X