நடிகர்கள் இறக்குமதி; மம்தா கட்சி, 'பேஷ்' திட்டம்

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, வங்க தேசத்தைச் சேர்ந்த, இரண்டு நடிகர்கள் பிரசாரம் செய்த போது பிடிபட்டனர். அவர் களை, நாட்டை விட்டு வெளியேறுமாறு, இந்திய உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகங்கள் உத்தரவிட்டு உள்ளன.லோக்சபா தேர்தலில் இதுவரை, இரண்டு கட்ட ஓட்டு பதிவு முடிந்துள்ளது; மூன்றாம் கட்ட பதிவு இன்று நடக்க உள்ளது. மூன்றாம் கட்ட ஓட்டு

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, வங்க தேசத்தைச் சேர்ந்த, இரண்டு நடிகர்கள் பிரசாரம் செய்த போது பிடிபட்டனர். அவர் களை, நாட்டை விட்டு வெளியேறுமாறு, இந்திய உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகங்கள் உத்தரவிட்டு உள்ளன.



latest tamil news



லோக்சபா தேர்தலில் இதுவரை, இரண்டு கட்ட ஓட்டு பதிவு முடிந்துள்ளது; மூன்றாம் கட்ட பதிவு இன்று நடக்க உள்ளது. மூன்றாம் கட்ட ஓட்டு பதிவு நடக்கும் இடங்களில், தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ளது. மற்ற இடங்களில், பிரசாரம் தீவிரமாக நடக்கிறது. ஏழு கட்டங்களிலும் தேர்தலை சந்திக்கும், மேற்கு வங்கத்தில், வெளிநாட்டு நடிகர்கள் பேர் வந்து, முதல்வர் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்தது, இந்திய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

மேற்கு வங்கத்தின் எல்லை நாடான, வங்க தேசத்தை சேர்ந்த பிரபல நடிகர்களான, பிர்தவுஸ் அஹமது மற்றும் காஜி அப்துல் நுார், திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, மேற்கு வங்கத்தின் பல இடங்களில் பிரசாரம் செய்துள்ளனர். இதுகுறித்து, ஆதாரப்பூர்வமாக புகார் வந்ததால், இரண்டு நடிகர்களையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு, மத்திய உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


latest tamil news



இந்திய அரசு வழங்கிய, 'விசா' விதிகளை, வங்க தேச நடிகர்கள் மீறி விட்டதாக, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நடிகர் பிர்தவுஸ் அஹமது மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும், விதியை மீறிய நடிகர்கள் இருவரையும், கிரிமினல் சட்டத்தில், போலீசார் கைது செய்திருக்க வேண்டும். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், அதை செய்ய வில்லை.

'இந்தியாவில் உள்ளவர்கள், இதேபோல், வங்க தேசம் சென்று, அங்குள்ள அரசியல்வாதிகளை ஆதரித்து பிரசாரம் செய்ய முடியுமா; அப்படி செய்தால், அங்குள்ள அதிபர், ஹசீனாவின் அரசு இந்தியர்களை விட்டு விடுமா?' என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிஉள்ளனர்.

- சாந்தனு பானர்ஜி -
சிறப்பு செய்தியாளர்

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
24-ஏப்-201905:36:20 IST Report Abuse
anbu மம்தா பங்களாதேஷுக்கு பிரதமர் ஆக இருக்க வேண்டியவர் . அங்கு தேர்தல் வந்தா இவர் தான் பங்களாதேஷ் பிரதமர் அல்லது ஜனாதிபதி.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
23-ஏப்-201920:48:42 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மம்தா இப்படியும் மக்களை ஏமாற்ற பார்த்தார் போலும். தன்னிடம் உண்மை உழைப்பு இல்லாத தால் இப்படி ஓர் பிழப்போ ..இவரையும் நாட்டை விட்டு விரட்டனும் போல்தெரிகிறது.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
24-ஏப்-201903:37:02 IST Report Abuse
Amal Anandanசரியாக சொன்னீர்கள். இப்படி மக்களை ஏமாற்ற நடிகர்களை இறக்குவது பிஜேபி மட்டுமே செய்யணும் இவர்கள் எப்படி செய்யலாம்?...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-ஏப்-201916:15:25 IST Report Abuse
Endrum Indian பேகம் மும்தாஜ் அப்புறம் எப்படி செயல்படுவார்??? நம்ம ஜல்லடை ஓட்டை சட்டம் இதைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளாது, மேற்கு வங்க போலீஸ் எல்லோரும் மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் போலீசாக இருக்கின்றது .நமது சட்டம் உடனே திருத்தி அமைக்கப்படவேண்டும்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X