அம்பானியின் ஆதரவு பெற்ற காங்., வேட்பாளர்!

Added : ஏப் 23, 2019
Advertisement
அம்பானியின் ஆதரவு பெற்ற காங்., வேட்பாளர்!

மொத்தம், 48 தொகுதிகளை கொண்ட, இம்மாதம், 29 வரை, நான்கு கட்டங்களாக லோக்சபா தேர்தலை சந்திக்கும், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை தெற்கு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருக்கு, வினோதமான ஆதரவு கூட்டம் உள்ளது.

'ரபேல் விமானங்கள் கொள்முதலில், ரிலையன்ஸ் நிறுவன அதிபர்களில் இளையவரான, அனில் அம்பானிக்கு ஆதரவாக, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு செயல்பட்டுள்ளது' என, காங்கிரஸ் தலைவர், ராகுல், காரசாரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மறைமுக பிரசாரம்:
ஆனால், மும்பை தெற்கு தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், மிலிந்த் தியோராவுக்கு, ரிலையன்ஸ் குடும்பத்தின் மூத்தவரான, முகேஷ் அம்பானி, நேரடியாக ஆதரவு தருகிறார். காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரான முரளி தியோராவின் மகனான மிலிந்த் வெற்றி பெற, அம்பானி உட்பட, ஏராளமான தொழிலதிபர்கள், மறைமுக பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

பிரபல வங்கியாளரான, உதய் கோடக்கும், மிலிந்த் தான் வெற்றி பெற வேண்டும் என்கிறார். அவருக்கு ஆதரவாக, அனில் அம்பானியின் அண்ணன், முகேஷ் ெவளியிட்டுள்ள வீடியோவில், 'இந்த தொகுதியைப் பற்றி மிலிந்த் நன்கு அறிந்தவர். பத்தாண்டுகள் இந்த தொகுதியின், எம்.பி.,யாக உள்ளார். 'தெற்கு மும்பைக்கு அவர் தான் மக்கள் பிரதிநிதியாக வேண்டும். அவரால், தொழில்கள் வளர்ச்சி அடையும்' என, தெரிவித்துள்ளார்.

கவலையில்லை:
'தன் தம்பியை, காங்கிரஸ் வசைபாடுகிறதே... ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறதே' என, முகேஷ் கவலைப்படவில்லை. இந்த தொகுதியில், காங்கிரசுக்கும், சிவசேனாவுக்கும் இடையே, நேரடி போட்டி நிலவு கிறது. சிவசேனா சார்பில், அரவிந்த் சவந்த் நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் தான், இந்த தொகுதியின், தற்போதைய, எம்.பி., இவருக்கு ஆதர வாக ஓட்டு சேகரிக்கும் பணியில், சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரேயின் மகன், ஆதித்ய தாக்கரே, மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

பிரசார யுக்திகளை, பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர், பிரஷாந்த் கிஷோர் மேற்கொண்டுள்ளார். இரண்டு பிரபலங்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவுவதால், யார் வெற்றி பெறுவார் என்பது, கணிக்க முடியாததாக உள்ளது.

- சுனிதா தாஸ் -
சிறப்பு செய்தியாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X