3ம் கட்ட தேர்தல்: 63.24 சதவீத ஓட்டுப்பதிவு

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
முக்கிய கட்டம்,லோக்சபா தேர்தல்,மூன்றாம் கட்டம், ஓட்டுப்பதிவு,துவக்கம்

புதுடில்லி: 3 ம் கட்ட தேர்தலில், மேற்கு வங்கத்தை தவிர மற்ற மாநிலங்களில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 63.24 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது.


latest tamil news
நாட்டின், 17வது லோக்சபாவுக்கான தேர்தல், ஏழு கட்டங்களாக நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. கடந்த, 11ம் தேதி நடந்த முதல் கட்டத் தேர்தலில், ஆந்திரா உட்பட, 20 மாநிலங்களில் உள்ள, 91 தொகுதிகளில், ஓட்டுப் பதிவு நடந்தது. அதைத் தொடர்ந்து, 18ம் தேதி, தமிழகம் உட்பட, 13 மாநிலங்களில் உள்ள, 95 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல், வாக்காளர்களுக்கு பணம் தருவதற்கு முயற்சி செய்ததால், ரத்து செய்யப்பட்டது. வடகிழக்கு மாநிலமான, திரிபுராவின், திரிபுரா கிழக்கு தொகுதிக்கான ஓட்டுப் பதிவு, சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் ஒத்தி வைக்கப்பட்டது. அந்தத் தொகுதியில், இன்று ஓட்டுப் பதிவு நடந்தது. இன்றுடன், மொத்தமுள்ள, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 22ல் தேர்தல் முடிந்தது.


latest tamil news


Advertisement3ம் கட்டமாக குஜராத், கேரளா உட்பட, 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 116 தொகுதிகளுக்கு தேர்தல் இன்று(ஏப்.,23) நடந்தது. குஜராத்தில் உள்ள, 26 தொகுதிகளும் இன்று தேர்தலை சந்தித்தன. அதேபோல் கேரளாவில் உள்ள, 20 தொகுதிகளிலும், ஜனநாயகக் கடமையாற்றினர். கர்நாடகாவில் மொத்தம்உள்ள, 28 தொகுதிகளில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடந்தது. மஹாராஷ்டிராவில், 14, உ.பி.,யில், 10 தொகுதிகளும் தேர்தலை சந்தித்தன.


latest tamil news
மூன்றாவது கட்ட தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிடும் வயநாடு, பா.ஜ., தலைவர் அமித் ஷா போட்டியிடும் காந்திநகர் உள்பட, பல மத்திய அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.


latest tamil news

ஒடிசாவில் சட்ட சபை தேர்தல்:கேரளாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர், அல்போன்ஸ் கன்னன்தனம்; முன்னாள் கவர்னர், கும்மனம் ராஜசேகரன்; காங்., மூத்த தலைவர், சசி தரூர் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். லோக்சபா தேர்தலுடன், ஒடிசாவில், சட்ட சபை தேர்தலும் நடக்கிறது. மொத்தமுள்ள, 147 தொகுதிகளில், 42 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப் பதிவு நடந்தது.


latest tamil news

முலாயம் குடும்பம் போட்டி:உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி நிறுவனருமான, முலாயம் சிங் யாதவ் மெயின்புரியிலும், அவருடைய உறவினர்களான, தர்மேந்திர யாதவ், பதான் தொகுதியிலும், அக் ஷய் யாதவ், பிரோசாபாத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். முலாயம் சிங்கின் சகோதரரான ராம் கோபால் யாதவின் மகனான அக் ஷய் யாதவை எதிர்த்து, முலாயமின் மற்றொரு சகோதரரான, ஷிவ்பால் யாதவ் போட்டியிடுகிறார்.


latest tamil news

மோடி, அத்வானி:இன்று நடக்கும் மூன்றாவது கட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி, குஜராத்தில் ஓட்டளித்தனர். குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில், பா.ஜ., தலைவர், அமித் ஷா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்தத் தொகுதிக்குட்பட்ட ரானிப் பகுதியில் உள்ள பள்ளியில், பிரதமர் மோடி ஓட்டளித்தார். அமித் ஷா, நாராண்புராவில் உள்ள சாவடியிலும், அத்வானி, கான்பூரில் உள்ள சாவடியிலும் ஓட்டளித்தனர்.


latest tamil news

63.24 சதவீதம்நடந்து முடிந்த 3 ம் கட்ட தேர்தலில் 116 தொகுதிகளில் மொத்தம் 63.24 சதவீதம் அளவிற்கு ஓட்டு பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அசாம் - 78.29%

பீஹார் - 59.97%

கோவா - 71.09%

குஜராத்- 60.21%

ஜம்மு காஷ்மீர் - 12.86%

கர்நாடகா - 64.14%

கேரளா - 70.21%

மஹாராஷ்டிரா - 56.57 %

ஒடிசா - 58.18%

திரிபுரா - 78.52%

உ.பி., - 57.74%

மேற்கு வங்கம் - 79.36%

சத்தீஸ்கர் - 65. 91%

தாத்ரா நாகர் ஹைவேலி - 71.43%

டாமர் டையூ - 65.34%


latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-ஏப்-201921:34:37 IST Report Abuse
இந்தியன் kumar நடிக்க தெரியாத பிரதமர் மோடிஜி மீண்டும் வர வேண்டும் , இது நல்லவர்களின் ஆசை.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
23-ஏப்-201910:21:30 IST Report Abuse
S.Baliah Seer 135 கோடி மக்கள் தொகை கொண்ட நம் இந்திய திரு நாட்டில் போதிய மேன்பவர் இருந்தும் மூன்று கட்டம், நான்கு கட்ட தேர்தல் என்பது ஏற்புடையதாக இல்லை. இது சம்பந்தமாக தொலைக்காட்சிகளில் காரசார விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் ஓரிரு பகுதிகளில் கலகம் நடப்பதைக்காட்டி இதுபோல் இரண்டு மாதம் தேர்தலை நடத்தக்கூடாது. வாக்கு எந்திர பெட்டிகளை நீண்ட நாள் வைத்தால் அவற்றின் பேட்டரி வீக் ஆகி வாக்கு எண்ணும்போது எராட்டிக் கவுன்டிங் கொடுக்கும் என்கிறார்கள் EVM நிபுணர்கள்.யார் யாருக்கு ஓட்டுப்போட்டார்கள் என்ற விவரத்தையும் மாஸ்டர் சிப் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.இது இந்திய அரசியல் சட்டத்தின் ரகசியக்காப்பீட்டுக்கு எதிரானது.
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
23-ஏப்-201909:22:46 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு கண்டிப்பாக நாளை மோடி பேசும் தேர்தல் பரப்புரையில் இதன் ரிசல்ட் தெரிய வரும் இரண்டு கட்ட தேர்தலில் அண்ணனுக்கு கட்டம் சரியில்லை ஆகவே தான் அனுதாப பரோபகாரி ராணுவத்தை பற்றி பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் சொல்லியும் இவர் அபிநந்தனை பற்றி நேற்று பேசி அனுதாபம் பெற முயன்றார் நாளை தெரியும் இவர் பேச்சில் இந்தியா சுதந்திரம் நாங்கள் தான் வாங்கி கொடுத்தோம் என்று சொன்னாலும் சொல்லுவார் இதையும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாது
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
23-ஏப்-201912:37:34 IST Report Abuse
parthaஇப்போதிலிருந்தே EVM பற்றி புலம்ப ஆரம்பித்துவிடீர்களே??? முன்னெச்சரிக்கை நடவடிக்கையா??...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X