(IED )விட (I D )பலமானது; மோடி

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (53)
Share
Advertisement
நான்,  அதிர்ஷ்டசாலி, மோடி, பிரதமர், தேர்தல், ஓட்டு

காந்திநகர்: வாக்காளர்கள் அடையாள அட்டை (I D ) என்பது , சக்தி வாய்ந்த வெடி மருந்தை (IED ) விட பலமானது. அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.

நாடு முழுவதும் இன்று 3 ம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் இன்று ஓட்டுப்பதிவு நடந்தது. இங்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பா.ஜ., தலைவர் அமித்ஷா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.


latest tamil news

இனிப்பு ஊட்டிய தாய்
latest tamil news


Advertisement3 வது கட்ட லோக்சபா தேர்தல் நடக்கும் குஜராத் மாநிலத்திற்கு இன்று பிரதமர் மோடி சென்றார். காந்திநகருக்கு சென்ற பிரதமர் அவரது தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றார்.


latest tamil news
மோடிக்கு தாயார் ஆசி வழங்கி இனிப்பு ஊட்டினார். மோடியும் தாயாருக்கு இனிப்பை ஊட்டி விட்டார்.


latest tamil news

latest tamil news
தொடர்ந்து மோடி ஆமதாபாத் புறப்பட்டு சென்றார். அங்குள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளித்தார்.


latest tamil news
முன்னதாக ஓட்டுச்சாவடியில் அமித்ஷா குடும்பத்தினர் மோடியை வரவேற்றனர். அமித்ஷாவின் பேத்தியை பிரதமர் தூக்கி கொஞ்சினார். மோடியை காண அப்பகுதி மக்கள் திரளாக கூடியிருந்தனர். மோடியை பார்த்து கையசைத்து ஆரவாரமாக வரவேற்றனர். மோடி, மோடி என மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.


latest tamil news

நான் ஒரு அதிர்ஷ்டசாலிஓட்டளித்த பின்னர் பிரதமர் மோடி ஜீப்பில் ஏறி நின்றவாறு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

இந்தியாவில் நடக்கும் ஜனநாயக திருவிழாவில் நான் ஒரு வாக்காளராக எனது கடமையை நிறைவேற்றினேன். சொந்த தொகுதியில் ஓட்டளித்த நான் ஒரு அதிர்ஷ்டசாலி. இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். இந்திய வாக்காளர்கள் அறிவில் சிறந்தவர்கள். அனைவரும் வளமான ஒளிமயமான எதிர்காலத்திற்கு சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் ஓட்டு அடையாளம் பெரும் ஆயுதம் ஆகும். வாக்காளர்கள் அடையாள அட்டை (I D ), சக்தி வாய்ந்த வெடி மருந்தை (IED )விட பலமானது. ஓட்டளிக்கும்போது கும்பமேளாவில் நீராடினால் தூய்மை அடைவது போல் ஒரு உணர்வு வரும். பயங்கராவதிகளுக்கு ஆயுதம் போல் வாக்காளர்களுக்கு வலுவானது ஓட்டு உரிமை. இதன் வலுவை உணர்ந்து சரியாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஏப்-201921:10:00 IST Report Abuse
ஆப்பு மக்களுக்கு 15 லட்சம் போடறேன், 150 லட்சம் கோடி கருப்பு பணம் கொணாருவோம், 2 கோடி பேருக்கு வேலைன்னு சொல்லிட்டு வந்தவங்களுக்கு மக்கள் IED யை விட பெரிய ஆப்பு வெப்பாங்க.
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
23-ஏப்-201919:54:12 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு ராகுல் பயந்து வயநாடு ஓடுகிறார் என்றால் மோடி ஏன் குஜராத்தை விட்டு ஓடி வாரணாசி ஓட வேணும் உள்ளூரில் பயமா இதற்க்கு பதில் உண்டா
Rate this:
Share this comment
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
24-ஏப்-201908:44:42 IST Report Abuse
DSM .S/o PLM இங்கேதான் தெரிகிறது உனது அறிவின்மை. குஜராத்தில் இருந்தும் வாரணாசியில் இருந்தும் கடந்த முறை போட்டியிட்ட மோடி இம்முறை ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவது என்று முடிவெடுத்து அதன் அடிப்படையில் இரு தொகுதிகளில் ஒன்றான வாரணாசியில் போட்டியிடுகிறார். ஒருவேளை வாரணாசியை தவிர்த்து குஜராத்தில் போட்டியிட்டிருந்தால், மோடி பயத்தினால் தான் யு பி யில் போட்டியிடாமல் தனது சொந்த மாநிலத்திற்கு ஓடி விட்டார் என்று சொல்லும் எலும்பில்லாத, கூசாத நாக்கு உடையவர்கள் தானே நீங்கள் எல்லோரும்?...
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
23-ஏப்-201919:46:08 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு அப்படியே பாக்கிஸ்தான் சிறையிலிருக்கும் ஜாதவ் அவர்களையும் மீட்டுக்கொண்டு வருவதுதானே.அதற்கு ஏவுகணைகள் இல்லையா? சீன ஆக்கிரமிப்பு நடந்த போது ஒரு துப்பாக்கி வெடி கூட வெடிக்க மறந்தது ஏன் மாயவினோதா..?? நோஞ்சான் நாடு பாக்கிஸ்தான் மட்டும்தான் நம்ம எதிரியா பரந்தாமா..??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X