(IED )விட (I D )பலமானது; மோடி| Dinamalar

(IED )விட (I D )பலமானது; மோடி

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (53)
Share
காந்திநகர்: வாக்காளர்கள் அடையாள அட்டை (I D ) என்பது , சக்தி வாய்ந்த வெடி மருந்தை (IED ) விட பலமானது. அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.நாடு முழுவதும் இன்று 3 ம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் இன்று ஓட்டுப்பதிவு நடந்தது. இங்கு உள்துறை அமைச்சர்
நான்,  அதிர்ஷ்டசாலி, மோடி, பிரதமர், தேர்தல், ஓட்டு

காந்திநகர்: வாக்காளர்கள் அடையாள அட்டை (I D ) என்பது , சக்தி வாய்ந்த வெடி மருந்தை (IED ) விட பலமானது. அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.

நாடு முழுவதும் இன்று 3 ம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் இன்று ஓட்டுப்பதிவு நடந்தது. இங்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பா.ஜ., தலைவர் அமித்ஷா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.


latest tamil news





இனிப்பு ஊட்டிய தாய்




latest tamil news


Advertisement



3 வது கட்ட லோக்சபா தேர்தல் நடக்கும் குஜராத் மாநிலத்திற்கு இன்று பிரதமர் மோடி சென்றார். காந்திநகருக்கு சென்ற பிரதமர் அவரது தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றார்.


latest tamil news




மோடிக்கு தாயார் ஆசி வழங்கி இனிப்பு ஊட்டினார். மோடியும் தாயாருக்கு இனிப்பை ஊட்டி விட்டார்.


latest tamil news





latest tamil news




தொடர்ந்து மோடி ஆமதாபாத் புறப்பட்டு சென்றார். அங்குள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளித்தார்.


latest tamil news




முன்னதாக ஓட்டுச்சாவடியில் அமித்ஷா குடும்பத்தினர் மோடியை வரவேற்றனர். அமித்ஷாவின் பேத்தியை பிரதமர் தூக்கி கொஞ்சினார். மோடியை காண அப்பகுதி மக்கள் திரளாக கூடியிருந்தனர். மோடியை பார்த்து கையசைத்து ஆரவாரமாக வரவேற்றனர். மோடி, மோடி என மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.


latest tamil news





நான் ஒரு அதிர்ஷ்டசாலி



ஓட்டளித்த பின்னர் பிரதமர் மோடி ஜீப்பில் ஏறி நின்றவாறு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

இந்தியாவில் நடக்கும் ஜனநாயக திருவிழாவில் நான் ஒரு வாக்காளராக எனது கடமையை நிறைவேற்றினேன். சொந்த தொகுதியில் ஓட்டளித்த நான் ஒரு அதிர்ஷ்டசாலி. இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். இந்திய வாக்காளர்கள் அறிவில் சிறந்தவர்கள். அனைவரும் வளமான ஒளிமயமான எதிர்காலத்திற்கு சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் ஓட்டு அடையாளம் பெரும் ஆயுதம் ஆகும். வாக்காளர்கள் அடையாள அட்டை (I D ), சக்தி வாய்ந்த வெடி மருந்தை (IED )விட பலமானது. ஓட்டளிக்கும்போது கும்பமேளாவில் நீராடினால் தூய்மை அடைவது போல் ஒரு உணர்வு வரும். பயங்கராவதிகளுக்கு ஆயுதம் போல் வாக்காளர்களுக்கு வலுவானது ஓட்டு உரிமை. இதன் வலுவை உணர்ந்து சரியாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X