சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் அருகே காவிரியாறு சுழலில் சிக்கி 6 பேர் பலி

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (2)
Advertisement
மூழ்கினர், பலி, நாமக்கல்

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, ஆற்றில் குளிக்கும்போது சுழலில் சிக்கி, அடுத்தடுத்து இரண்டு குடும்பங்களை சேர்ந்த, மூன்று குழந்தைகள் உள்பட, ஆறு பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த பொத்தனுாரை சேர்ந்தவர் சரவணன், 45; 'சிவசக்தி' என்ற பெயரில், போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். மனைவி ஜோதிமணி, 35. இவர்களுக்கு, 10 வயதில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் தீபகேஷ், சாரகேஷ் என்ற, இரு மகன்கள் (இரட்டையர்கள்) இருந்தனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறையாதலால், சேலத்தை சேர்ந்த ஜோதிமணியின் தோழி தேவிஸ்ரீ, 35, அவரது மகள் ஹஷ்விகா, 7, ஆகியோர் பொத்தனுார் வந்துள்ளனர். காலை, 8:30 மணிக்கு சரவணன், ஜோதிமணி, இரு மகன்கள், தேவிஸ்ரீ, அவரது மகள் மற்றும் சரவணனின் அண்ணன் தனசேகரன் மகன் ரோஹித், 16 ஆகிய ஏழு பேரும், காவிரி ஆற்றுக்கு சென்றனர்.ஆற்றின் கரையில் இருந்து, 700 மீட்டர் துாரம் உள்ளே சென்றவர்கள், கடையில் இருந்து வாங்கி சென்ற உணவை சாப்பிட்டனர். 9:30 மணிக்கு ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஜோதிமணி சுழலில் சிக்கினார். அதை பார்த்த அவரது தோழி, ஹஷ்விகாவை பிடித்தபடி, அவரை காப்பாற்ற முயற்சித்தார்.
தீபகேஷ், சாரகேஷ் மற்றும் சரவணன் ஆகியோர், அவர்களை மீட்கச் சென்று சுழலில் சிக்கினர். முன்னதாக, சரவணன், ரோஹித்திடம் 'வீட்டுக்கு போன் போட்டு தகவல் சொல்லு' என, கூறியுள்ளார். இதையடுத்து, தனசேகரனுக்கு சம்பவம் குறித்து ரோஹித் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு, ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியில் இறங்கினர்.

நாமக்கல், பரமத்திவேலூர் அருகே, பொத்தனூரை சேர்ந்த சரவணன், மனைவி ஜோதி, 10 வயதான இரட்டையர் மகன்கள் தீபகேஷ், சாரகேஷ் உறவினர் மகன் ரோஹித், மற்றும் குடும்ப தோழியான சேலத்தை சேர்ந்த தேவி அவரது 6 வயது குழந்தை அஸ்விகா ஆகியோருடன் கோடை விடுமுறையை கழிக்க காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார். குழந்தைகள் ஆற்றில் விளையாடி கொண்டிருந்தபோது, அஸ்விகா திடீரென நீரில் அடித்து செல்லப்பட்டாள். அவளை காப்பாற்ற இரட்டை சகோதர்கள் முயன்றபோது, அவர்களும் நீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்த, சரவணன், ஜோதி, தேவி மூவரும், அவர்களை காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். கரையில் இருந்த ரோஹித் மட்டும் உயிர்தப்பினான். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஐந்து பேரின் உடல்களை மீட்டனர். குழந்தை அஸ்விகாவின் உடலை தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல், திருச்செங்கோடு, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு படையினர், பொதுமக்கள், மீனவர்கள் உதவியுடன் நீரில் மூழ்கியவர்களை தேடினர். அடுத்தடுத்து, ஒவ்வொரு உடலாக மீட்கப்பட்டது. ஐவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஹஷ்விகாவின் உடலை தேடும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆசியா மரியம், எஸ்.பி., அருளரசு, எம்.பி., சுந்தரம் ஆகியோர், பொத்தனுார் சென்று, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jebamani Mohanraj - Chennai,இந்தியா
02-மே-201921:05:12 IST Report Abuse
Jebamani Mohanraj உள்ளுர் வாசியான இவர்களின் கவனக் குறைவே காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளது காவல் துறை === ஆமாம் புதை மணல் இருக்கிறது சூழல் இருக்கிறது என்பது தெரிந்தும் இறந்துபோனவர்கள் அங்கே போய் இருக்கிறார்கள் .தற்கொலை செய்து கொண்டார்கள் போல தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Jebamani Mohanraj - Chennai,இந்தியா
02-மே-201920:10:25 IST Report Abuse
Jebamani Mohanraj
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X