ஒட்டுப்பதிவு இயந்திர கோளாறு: பா.ஜ., மீது புகார்

Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (44)
Share
Advertisement

புதுடில்லி: நாடுமுழுவதும் இன்று 3 ம் கட்ட லோக்சபா தேர்தல் விறு, விறுப்பாக நடந்து வருகிறது. கேரளாவில் பல இடங்களில் ஓட்டு மின்னணு இயந்திரங்கள் பழுதானது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். சில சாவடிகளில் காலதாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது. கேரளாவில் சபரிமலை விவகாரம் இந்த தேர்தலில் முக்கிய விவாத பொருளாக உள்ளது.latest tamil news


கேரளாவில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சசிதரூர் புகார் அளித்தார். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கவலை தெரிவித்துள்ளார். ஓட்டு இயந்திரம் பழுது பா.ஜ.,வுக்கு ஓட்டு செல்வாக கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அவரது டுவிட்டரில்;

மின்னணு இயந்திரத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டு விழுவதாக செய்தி வருகிறது. இது கோளாறா அல்லது பா.ஜ.,வுக்கு ஓட்டா , தேர்தலுக்கென பல ஆயிரம் கோடி செலவு வீண். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இன்று நடக்கும் மூன்றாம் கட்ட ஓட்டுப் பதிவு, 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேதங்களில் உள்ள, 116 தொகுதிகளில் நடக்கிறது. இன்றுடன், மொத்தமுள்ள, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 22ல் தேர்தல் முடிகிறது.


15 மாநிலங்கள்


குஜராத், கேரளா உட்பட, 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 116 தொகுதிகளுக்கு தேர்தல் இன்று நடக்க உள்ளது. குஜராத்தில் உள்ள, 26 தொகுதிகளும் இன்று தேர்தலை சந்திக்கின்றன. அதேபோல் கேரளாவில் உள்ள, 20 தொகுதிகளிலும், ஜனநாயகக் கடமையாற்ற மக்கள் காத்திருக்கின்றனர். கர்நாடகாவில் மொத்தம்உள்ள, 28 தொகுதிகளில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. மஹாராஷ்டிராவில், 14, உ.பி.,யில், 10 தொகுதிகளும் தேர்தலை சந்திக்கின்றன.


latest tamil news


ஏற்கனவே முதல் கட்டத்தில், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது கட்டத்தில் நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிந்துள்ளது. மொத்தம் நடக்கும் ஏழு கட்டங்களில், மூன்றாவது கட்டத்தில் தான், மிகவும் அதிகபட்சமாக, 116 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஏப்-201921:19:38 IST Report Abuse
ஸாயிப்ரியா வரப்போகும் ரிசல்ட்டிற்கு இப்போதிலிருந்தே காரணம் தேடுகிறார்கள். உள்ளூர உதறல்.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-ஏப்-201920:35:38 IST Report Abuse
Krishnamurthy Venkatesan MOCK POLL HAS BEEN DONE INFRONT OF BOOTH AGENTS. THE FUNCTIONING OF THE BU, CU, VVPAT HAVE BEEN CHECKED THOROUGHLY. THE BOOTH AGENTS HAVE ALSO SIGNED THE MOCK POLL CERTIFICATE AS THE TEM IS CORRECT. TOTAL VOTES POLLED AND ITS CORRECTNESS DURING MOCK POLL IS VERIFIED BY 1. CHECKING TOTAL POLLS VOTED BY PRESSING TOTAL BUTTON, 2. CROSS CHECKED FROM VVPAT VOTE SLIP AND COUNTED THE SLIP AND IT IS ALSO TALLYING. 3. THE POLLING OFFICERS ALSO NOTED THE VOTE ED CANDIDATEWISE MANUALLY AND CHECK THE CORRECTNESS. WHEN ALL THE THREE PROCESS ARE FOUND TO BE CORRECT AND THE BOOTH AGENTS ACCEPTED ITS CORRECTNESS, THE QUESTION OF MALL FUNCTIONING (ALL VOTES GO TO BJP) OF THE EVM DOES NOT ARISE AND BASELESS.
Rate this:
Cancel
dinesh - pune,இந்தியா
23-ஏப்-201918:38:25 IST Report Abuse
dinesh Athu kolaaru illappaa. Unga ethirkaalam patriya peethi.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X