பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் புயல் சின்னம்

Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (11)
Advertisement
 தமிழகம், புயல், சின்னம், Storm,TN,Tamilnadu,Weather,

சென்னை: வங்க கடலில் ஏற்படவிருக்கும் புயல் சின்னம் காரணமாக வரும் 29 ம் தேதி உள் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மண்டல இயக்குனர் புவியரசன் கூறியதாவது: இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த தாழ்வு 27 ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வரும் 29 ம் தேதி புயலாக மாறும்.


வங்க கடலில் ஏற்பட உள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில், வரும் 29ம் தேதி முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இதன் காரணமாக வரும் 29 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன்கூடிய கனமழை பெய்யும். ஈரோடு, சேலம், கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேமூட்டமாக காணப்படும்.


ஆத்தூரில் நல்ல மழை


வெப்பச்சலனம் காரணமாக கடந்த 2 நாட்களில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிகப்பட்சமாக 10 செ.மீ. மழையும், பெரியகுளத்தில் 6 செ.மீ., மழையும், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரியில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஏப்-201920:06:00 IST Report Abuse
தமிழ்வேல் புயல் சின்னமா..... இந்த சின்னத்தில் யார் யார் நிற்ற்கின்றார்கள் சார் ?
Rate this:
Share this comment
Cancel
Babu Desikan - Bangalore,இந்தியா
23-ஏப்-201919:25:10 IST Report Abuse
Babu Desikan மழை எவ்வளவு பெய்தாலும் தகும். இந்த பூமி தாங்கும். பெய்யக் கடவது.
Rate this:
Share this comment
Cancel
pkt -  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-201918:05:30 IST Report Abuse
pkt gaja return
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X