தமிழகத்தில் புயல் சின்னம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் புயல் சின்னம்

Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (11)
Share
சென்னை: வங்க கடலில் ஏற்படவிருக்கும் புயல் சின்னம் காரணமாக வரும் 29 ம் தேதி உள் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மண்டல இயக்குனர் புவியரசன் கூறியதாவது: இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த தாழ்வு 27 ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வரும் 29
 தமிழகம், புயல், சின்னம், Storm,TN,Tamilnadu,Weather,

சென்னை: வங்க கடலில் ஏற்படவிருக்கும் புயல் சின்னம் காரணமாக வரும் 29 ம் தேதி உள் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மண்டல இயக்குனர் புவியரசன் கூறியதாவது: இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த தாழ்வு 27 ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வரும் 29 ம் தேதி புயலாக மாறும்.


latest tamil news




இதன் காரணமாக வரும் 29 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன்கூடிய கனமழை பெய்யும். ஈரோடு, சேலம், கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேமூட்டமாக காணப்படும்.


ஆத்தூரில் நல்ல மழை


வெப்பச்சலனம் காரணமாக கடந்த 2 நாட்களில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிகப்பட்சமாக 10 செ.மீ. மழையும், பெரியகுளத்தில் 6 செ.மீ., மழையும், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரியில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X