ராகுல் விளக்கம் ஏற்பு இல்லை: பாய்ந்தது நோட்டீஸ்

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (50)
Advertisement
ராகுல், சுப்ரீம் கோர்ட், நோட்டீஸ்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி பொய் சொன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது பா.ஜ., சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டுக்கு ராகுல் சொன்ன பதிலில் திருப்தியில்லை எனக்கூறிய சுப்ரீம் கோர்ட். அவருக்கு மீண்டும் கிரிமினல் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையையும் ஏற்க மறுத்துவிட்டது.


பதில் மனு


ரபேல் போர் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளில் குறிப்பிட்டிருந்த சில ஆவணங்கள் ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.

இந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியது. அப்போது, இது குறித்து, காங்., தலைவர், ராகுல் கூறுகையில், தன்னை நாட்டின் காவல்காரனாக கூறிக்கொள்ளும், பிரதமர் மோடி, ஒரு திருடன் என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது எனக்கூறியிருந்தார்.

கோர்ட் கூறாததை பொய்யாக மாற்றிக்கூறி, கோர்ட் அவமதிப்பு செய்துள்ளதாக, பா.ஜ., பெண் எம்.பி., மீனாட்சி லேகி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து பதில் அளிக்க ராகுலுக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை எதிர்தரப்பு தவறுதலாக பயன்படுத்துகிறது.
நீதிமன்றத்துக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையில், இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்தக் கருத்தை கூறியதற்காக, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான, தீர்ப்பு வெளியானபோது, தங்கள் மீது தவறு ஏதுமில்லை என, உச்சநீதிமன்றம் சான்று அளித்துள்ளது என, பா.ஜ.,வும், மத்திய அரசும் கூறின. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.






நிராகரிப்பு

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ராகுல் சார்பில் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வியும், மீனாட்சி லேகி சார்பில் முகுல் ரோகத்ஹியும் ஆஜரானார்கள்.அப்போது, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ராகுலின் மன்னிப்பை ஏற்க மறுத்ததுடன், விளக்கம் அளிக்க வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையை ஏற்க மறுத்து விசாரணையை ஏப்.,30க்கு ஒத்தி வைத்தனர்.




Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
25-ஏப்-201904:08:05 IST Report Abuse
meenakshisundaram அவன் பேச்சு அவனுக்கே புரிவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
bala somasekaran - Santiago,சிலி
24-ஏப்-201900:30:48 IST Report Abuse
bala somasekaran ஒரே கேள்வியை கொஞ்சம் மாத்தி கேட்ட பதில் சொல்ல தெரியாத மனப்பாட முட்டாள்...
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
24-ஏப்-201900:18:54 IST Report Abuse
Subramanian Arunachalam இந்த சல சலப்புக்கு ராகுல் காந்தி ஒன்றும் அஞ்ச மாட்டார் . நீதி துறை முழுவதும் காங்கிரஸ் வசம் . அதனால் தான் காங்கிரெஸ்க்காரர்கள் சம்பந்தப்பட்ட எந்த வழக்கும் ஒரு முடிவுக்கு ஒரு நாளும் வராது . அவர்கள் விரும்பும் வரையில் ஜாமீன் மற்றும் பெயில் வழங்கப்படும் . பி ஜெ பி சம்பந்தப்பட்ட வழுக்குகள் மட்டும் அவசரமாக விசாரணைக்கு ஏற்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X