இலங்கை குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (54)
Advertisement
SrilankaAttack, இலங்கை, வெடிகுண்டு, வாகனம், தாக்குதல்

கொழும்பு: இலங்கையில் நேற்று முன்தினம் (ஏப்.,21) நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம்(ஏப்.,21) அன்று இலங்கையில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 24க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சிரியா நாட்டை சேர்ந்த ஒருவரை இலங்கை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிர் இழந்தவர்களுக்காக இன்று கூட்டு பிரார்த்தனை நடந்தது.




பொறுப்பேற்பு


இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக, அந்த அமைப்புடன் தொடர்புடைய அமேக் நிறுவனத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் கொண்டாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இண்டர்போல் உதவி


இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவி செய்ய குழு ஒன்றை சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர் போல் நியமித்துள்ளது. குற்றப்பின்னணி, வெடிபொருள், பயங்கரவாத தடுப்பு, பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்தல் உள்ளிட்டவைகளில் திறன் பெற்ற அதிகாரிகள் இந்த குழுவில் இருப்பார்கள்.


வெடிபொருள் கண்டுபிடிப்பு


கொச்சிகடேவின், ஜம்பேட்டை சாலையில் உள்ள புனித அந்தோணி தேவாலயம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் வெடிபொருள் இருந்ததை கண்டுபிடித்த போலீசார், அதனை செயலிழக்க செய்தனர்.


பதற்றம்


இந்நிலையில், வெடிகுண்டுகளுடன் லாரி மற்றும் வேன் கொழும்பு நகரை சுற்றி வருவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனால், அனைத்து போலீஸ் ஸடேசன்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கொழும்பு துறைமுக நுழைவு வாயில் உட்பட அனைத்து பகுதிகளிலும் சோதனை நடக்கிறது. நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.





பதிலடி?

இலங்கை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்னர் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தேசிய தவ்ஹித் ஜமாத் உள்ளிட்ட இரண்டு அமைப்புகள் தான் தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.


45 குழந்தைகள் பலி

இந்நிலையில், இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 45 குழந்தைகள் உயிர் இழந்துள்ளதாக யுனிசெப் கூறியுள்ளது.


மன்னிப்பு

இதனிடையே, வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் பொது மக்கள் உயிர் இழந்ததற்கு இலங்கை அரசு மன்னிப்பு கேட்டு கொண்டது. உளவுத்துறை தகவல்களில் போதுமான கவனம் செலுத்த தவறிவிட்டதாக அந்த செய்தியில் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakashc - chennai,இந்தியா
24-ஏப்-201912:18:02 IST Report Abuse
prakashc
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
24-ஏப்-201907:14:57 IST Report Abuse
K.   Shanmugasundararaj இந்த ஐ எஸ் ஐ எஸ் , ஒபாமா பின்லேடன் ஆகியோரை உருவாக்கி , அவர்களை வளர்த்து விட்டது யார்?. உலக ஏகாதிபத்தியத்தின் தலைவன் அமெரிக்கா .தனது நாட்டில் உற்பத்தியாகும் ஆயுதங்களை விற்பனை செய்திடவும், உலக மக்கள் நிம்மதி அற்று வாழவும் செய்திடுவது அமெரிக்கா.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
23-ஏப்-201921:25:37 IST Report Abuse
Sanny ISIS தீவிரவாதிகள் தங்கள் தான் செய்தோம் என்று தங்கள் இணையத்தளம் மூலம் இந்த தாக்குதல் வெற்றியை கொண்டாடியதாக அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். சில நாடுகளில் TV செய்தயாகாட்டப்பட்டது. உண்மையில் நாங்கள் ஒரு கொள்கைக்காக போராடுகிறோம் என்றால் நியூசிலாந்தில் நடந்ததுக்காக பழி தீர்க்க தான் என்றால், தங்கள் தகுதிக்கு ஏற்ற ஒருநாட்டை தெரிவு செய்து தாக்குதல் நடாத்தி இருக்கணும், அதாவது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா,, அமெரிக்க, இங்கிலாந்து முடிந்தால் இந்தியாவை தெரிவு செய்து தனது பலத்துக்கு சமமான ஒரு நாட்டில் தாக்குதல் நடாத்தியிருக்கணும், இலங்கை போன்ற ஒரு சிறிய வறிய நாட்டை தெரிவு செய்தது கேவலத்திலும், கேவலமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X