அற்புதமான இளைஞர் விகாஷ் தாஸ்

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (3)
Advertisement

ஒடிசாவில் பழங்குடி மக்களின் வாழ்வியலை படம் எடுக்கச் சென்றிருந்த நண்பர் மணிகண்டன் பழங்குடியினர் தோற்றத்தில்தான் மாற்றம் இல்லையே தவிர மற்றபடி அவர்களிடம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிறைய இருக்கிறது என்றார்.இந்த மாற்றத்தை இவர்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டு இருப்பவர் ஒரு இளைஞர் என்று மட்டும் தகவல் கிடைக்க யார் அவர் என்ற தேடலே இந்தக்கட்டுரை.
பொருளும்,புகழும் விரும்பாமல், தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள் இப்போது இருக்கின்றனரா? என்ற கேள்விக்கான பதில்தான் விகாஷ் தாஸ்.

பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவில் பிறந்தவர்.அருகாமையில் இருந்த ஆதிவாசிகளான பழங்குடியின மக்களிடம் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது அந்தக்குழந்தைகளுடன் விளையாடக்கூடாது மறந்தும் அவர்களை தொட்டுவிடக்கூடாது என்றெல்லாம் சொல்லி வளர்க்கப்பட்டவர்.
அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தானே ஏன் இந்த வேற்றுமை என்ற வேதனை அவருக்கு சிறுவயதிலேயே ஏற்ப்பட்டது ஆனால் அவர் மனக்குரலுக்கு அப்போது வயதும் இல்லை வலிமையும் இல்லை.
மென்பொருள் பொறியாளராக ஐபிஎம்மில் வேலை கிடைத்தது.பெரிய உத்தியோகம் பெரிய சம்பளம் பெரிய நிறுவனம் என்று பொதுப்பார்வையில் அவர் ஒரு மதிப்புமிக்க இளைஞராகத் தென்பட்டார்.
ஆனால் அவரது உள்மனது, இளவயது அனுபவத்தை அசைபோட்டுக்கொண்டே இருந்தது.இந்த மாயமான் வேலைக்கு தான் பொருத்தமானவன் இல்லை என்று முடிவு செய்து பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டார். பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கு பாடுபடுவது எனமுடிவு செய்து அவர்கள் வசிப்பிடத்தி்ற்கே சென்று தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்.
அவர்களுடன் பேசிப்பழகி அவர்கள் பிரச்னைகளை வேதனைகளை நேரடியாக அனுபவித்த போதுதான் அவர்கள் வாழ்க்கை எவ்வளவு அடிமட்டத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்தார்.
வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை அவர்களுக்காக செலவழித்தார்.அவர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.வெற்றிகரமான விவசாய முறைகளை கற்றுக் கொடுத்தார்.பெண்களுக்கு வருமானம் தரக்கூடிய எளிய நெசவு போன்ற தொழிலை பழகிக்கொடுத்தார்.இவர்களது உற்பத்தி பொருளுக்கு நியாயமான விலை கிடைக்கவும் ஏற்பாடு செய்தார்.ஆனால் அவர்களை ஒரு போது நாகரீகம் என்ற கோமாளித்தனத்திற்கு மடைமாற்றம் செய்யவில்லை அவர்களது கலாச்சாரம் பண்பாடு வழிமுறை வழிபாடு எதையும் விட்டுக்கொடுக்கமாமல் அவர்கள் அவர்களாகவே இருக்கும்படி விட்டுவிட்டார்.
இதன் காரணமாக தாஸை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக தங்கள் குலத்தை உயர்த்த வந்த தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டனர் சுமார் 368 குடும்பங்களின் நிலை இப்போது ஆரோக்கியமாக மாறியிருக்கிறது. குழந்தைகள் முதல் முறையாக படிக்கின்றனர்,பெண்கள் சொந்தமாக தொழில் செய்து பணத்தை சேமிக்க கற்றுக்கொண்டுள்ளனர்,ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துகி்ன்றனர்.
இன்னும் இவர்களுக்காக பயணிக்க வேண்டிய துாரம் நிறைய இருக்கிறது.கல்வியின்மை, வேலையின்மை, நிலமின்மை, உடல் நலமின்மை, சுகாதாரமின்மை, இலாபம் தராத வேளாண்மையால் பல காலமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தரகர்கள், வர்த்தகர்கள், வட்டிக்கு அளிப்பவர்கள் ஆகியோரின் சுரண்டல்களால் முடங்கிப்போய் உள்ளனர்.
இந்தப்பிரச்னைகளை எல்லாம் களையப்பட்டு மனித குலத்திற்கு உண்டான மாண்புகளான சிரிப்பது சந்தோஷமாக இருப்பது நிம்மதியாக வாழ்பவது என்று மெதுவாக முன்னேற்ற பாதையை நோக்கி செல்கின்றனர்.
அதே நேரம் “வளர்ச்சி என்றால் அது பழங்குடி மக்களை நகரிய வாழ்க்கைக்குள் கொண்டு வருதல் என்பதல்ல. பழங்குடி மக்களை பொது நீரோட்டத்துடன் கொண்டு வந்து இணைப்பதும் அல்ல. பழங்குடிகளுக்கென்று ஓர் செழுமையான கலாச்சாரம் உள்ளது. அது தனித்துவமிக்கது. ஆனால் அது இன்று நிலைத்திருக்க முடியாத நெருக்கடியை எதிர்கொள்கிறது. அது பாதுகாக்கப்பட வேண்டும் பலப்படுத்த வேண்டும் என்ற இலக்கினை நோக்கி என் எஞ்சிய வாழ்வு செல்கிறது என்கிறார் தாஸ்.
தாஸ் போன்ற இளைஞர்களால்தான் இந்த நாட்டின் கவுரவம் உயர்ந்து வருகிறது.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anand - Chennai,இந்தியா
26-ஏப்-201920:55:57 IST Report Abuse
anand நல்ல வேலை missionarigal இல்லை..இருந்திருந்தால் அந்த மக்களின் கலாச்சாரத்தை ஒழித்து இருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
26-ஏப்-201916:13:37 IST Report Abuse
kalyanasundaram politicians knows to swindle only
Rate this:
Share this comment
Cancel
siva - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஏப்-201916:03:53 IST Report Abuse
siva எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X