ஊழலில் காங்., திரிணமுல் இடையே போட்டி: பிரதமர்

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (11)
Advertisement
காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ்,மம்தா, திரிணமுல், மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி, பா.ஜ., பாஜ

அசன்சோல்: ஊழலில் காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: தேர்தலில் தோல்வியடைவோம் என தெரிந்து கொண்டதால் தான், மோடியையும், தேர்தல் ஆணையத்தையும் மம்தா பானர்ஜி விமர்சிக்கிறார். திரிணமுல் ஆட்சியில் ஊழல் மற்றும் குற்றங்கள், முடிவுக்கு வரவில்லை. ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு முதல்வர் துணை நிற்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.



மம்தா, தன்னை பாதுகாக்க முதலில் ஊடுருவல்காரர்களை பயன்படுத்தினார். தற்போது பிரசாரத்திற்காக வெளிநாட்டவர்களை அழைத்து வருகிறார். திரிணமுல் பேரணிக்கு மக்கள் வர மறுக்கின்றனர். இதனால், வெளிநாடுகளில் இருந்து நடிகர்களை வரவழைக்கின்றனர்.
இதற்காக நான் மம்தாவுக்காக பரிதாபப்படுகிறேன். 2014க்கு முன்னர் காங்கிரஸ் அரசு ஊழலில் சாதனை படைத்தது. தற்போது, காங்கிரசுக்கு திரிணமுல் காங்கிரஸ் கடும் போட்டியை கொடுக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சௌக்கிதார் அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
24-ஏப்-201908:09:25 IST Report Abuse
சௌக்கிதார் அம்பி ஐயர் கடந்த ஐந்து வருட ஆட்சியில் பாஜக எந்த சாதனையும் செய்யவில்லை என்போர்... கடந்த ஐம்பது ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் என்னென்ன சாதனைகள் செய்தன... என்பதைச் சொல்லலாமே....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஏப்-201907:56:40 IST Report Abuse
Srinivasan Kannaiya அரசியல்வாதிகள்தான் ஒப்பந்த முறையை கொண்டு வந்தார்கள்... இதுதான் ஊழலின் ஊற்றுக்கண்... இதை இந்திராகாந்தி எல்லாமாடத்திலேனும் அப்பொழுது தடை செய்து இருந்தால் கவுன்சிலர் கூட செலவந்தர்கள் தரவரிசையில் வந்து இருக்கமுடியாது... அரசில் வேலை வாய்ப்பு அதிகரித்து இருக்கும்..வேலை இல்லா திண்டாட்டம் குறைந்து இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
24-ஏப்-201907:10:28 IST Report Abuse
K.   Shanmugasundararaj சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு வேதனையை தான் பி ஜெ பி / மோடி / ஆர் எஸ் எஸ் அமைப்புகள் தந்துள்ளன. பெட்ரோல் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு, ஜி எஸ் டி வரி ,வேலை இன்மை அதிகரிப்பு, சிறு ,குறு தொழில்கள் மூடல் , விவசாயிகள் தற்கொலை என மக்கள் விரோத செயல்கள் தான் பி ஜெ பி / மோடி ஆட்சியில் நடந்துள்ளன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X