ஊழலில் காங்., திரிணமுல் இடையே போட்டி: பிரதமர்| Dinamalar

ஊழலில் காங்., திரிணமுல் இடையே போட்டி: பிரதமர்

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (11)
காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ்,மம்தா, திரிணமுல், மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி, பா.ஜ., பாஜ

அசன்சோல்: ஊழலில் காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: தேர்தலில் தோல்வியடைவோம் என தெரிந்து கொண்டதால் தான், மோடியையும், தேர்தல் ஆணையத்தையும் மம்தா பானர்ஜி விமர்சிக்கிறார். திரிணமுல் ஆட்சியில் ஊழல் மற்றும் குற்றங்கள், முடிவுக்கு வரவில்லை. ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு முதல்வர் துணை நிற்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.





மம்தா, தன்னை பாதுகாக்க முதலில் ஊடுருவல்காரர்களை பயன்படுத்தினார். தற்போது பிரசாரத்திற்காக வெளிநாட்டவர்களை அழைத்து வருகிறார். திரிணமுல் பேரணிக்கு மக்கள் வர மறுக்கின்றனர். இதனால், வெளிநாடுகளில் இருந்து நடிகர்களை வரவழைக்கின்றனர்.
இதற்காக நான் மம்தாவுக்காக பரிதாபப்படுகிறேன். 2014க்கு முன்னர் காங்கிரஸ் அரசு ஊழலில் சாதனை படைத்தது. தற்போது, காங்கிரசுக்கு திரிணமுல் காங்கிரஸ் கடும் போட்டியை கொடுக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X