இலங்கை குண்டுவெடிப்பு: இந்தியா விசாரிக்கும்

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (27)
Advertisement
இலங்கை, இந்தியா, குண்டுவெடிப்பு,

புதுடில்லி: இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்து 300 பேர் பலியானது தொடர்பாக அந்நாட்டின் விசாரணையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்று ஏப்.4ம் தேதி அந்நாட்டை இந்திய புலனாய்வு அமைப்பு எச்சரித்தது. ஆனால் இதன் மீது முன்னெச்சரிக்கை எடுக்க இலங்கை தவறி விட்டது.இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த நமது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.,) ஆர்வமாக உள்ளது.






என்.ஐ.ஏ., அதிகாரி ஒருவர் கூறும்போது, ‛‛இலங்கைக்கு சென்று விசாரணை நடத்த விரும்புகிறோம். இவ்வளவு பெரிய தாக்குதல் இந்திய துணைக்கண்டத்தில் சமீபத்தில் நடந்ததாக நினைவில் இல்லை. விடுதலை புலிகள் வீழ்ந்த பிறகு இலங்கையில் தாக்குதல் நடத்தப்படவில்லை. புதிய தீய சக்திகள் இப்போது கிளம்பி உள்ளதையே இந்த தாக்குதல் உணர்த்துகிறது. இது இந்தியாவின் நலனுக்கும் எதிரானது'' என்றார்.






‛‛வெளிநாட்டு சக்திகளின் பயிற்சி, வெடிகுண்டு சப்ளை இல்லாமல் இலங்கை தாக்குதல் நடந்திருக்க முடியாது. தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்.ஜெ.டி.,) என்ற அமைப்பு இதில் ஈடுபட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. முன்னே பின்னே கேள்விப்படாத இதுபோன்ற அமைப்பால் இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தி இருக்க முடியாது.






ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்திருந்த இலங்கை இளைஞர்கள் சிலர் சமீபத்தில் சிரியாவில் இருந்து திரும்பி உள்ளனர். இவர்கள் வெடிகுண்டு வைத்திருக்கலாம். இந்த கோணத்திலும் விசாரிக்க வேண்டும்'' என்றார் அந்த அதிகாரி.

சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரத்தின்மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் வந்த 2 இலங்கையர்களை என்.ஐ.ஏ., அதிகாரிகள் 2014ல் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை இலங்கை துணை துதாதரக அதிகாரி ஒருவர் இந்த பணிக்கே நியமித்தது விசாரணையில் தெரிய வந்தது.







இலங்கைக்கு எச்சரிக்கை


இலங்கையின் கிழக்கு பகுதியில் காலுான்ற லஷ்கர் இ தொய்பா (எல்.இ.டி.,) முயற்சி செய்கிறது என்று ஏற்கனவே இலங்கையை இந்தியா எச்சரித்திருந்தது. 2015 பாரீசில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு பிரான்ஸ் சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ.,விரும்பியது. அந்த தாக்குதலில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு பாகிஸ்தானை சேர்ந்த எல்.இ.டி., உடன் தொடர்பு இருந்தது. அந்த குற்றவாளியிடம் விசாரணை நடத்த இந்திய அதிகாரிகள் ஆர்வம் காட்டினர். ஆனால் அது கடைசி வரை நடக்கவில்லை.

இந்திய புலனாய்வு அதிகாகளால் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்தவரின் பெயர் சகீர் ஹூசைன். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் துாதரகங்களை தாக்க அவர் திட்டமிட்டது தெரிய வந்தது. சில நாட்கள் கழித்து அவரது சுலைமான் என்ற கூட்டாளி மலேசியாவில் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இலங்கையில் உள்ள பாக்., துாதரக அதிகாரி ஒருவர் தான் தாக்குதல் பணியை ஒப்படைத்துள்ளார். இலங்கையின் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கு இடையே போர் நடந்து கொண்டிருந்த 1980களில் அப்பகுதி முஸ்லீம்கள் பழமைவாதத்தை நோக்கி ஈர்க்கப்பட்டனர்.


ஐ.எஸ்.,சுக்கு தொடர்பு:

இதற்கிடையே இலங்கை குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனால் இலங்கை அரசின் விசாரணை புதிய கோணத்தில் தொடர உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஏப்-201907:53:13 IST Report Abuse
Srinivasan Kannaiya பார்த்து பல சமையல்காரர்கள் உணவை கெடுக்கக்கூடும்
Rate this:
Share this comment
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
24-ஏப்-201907:16:47 IST Report Abuse
Sankare Eswar இப்போதும் ஒரு அமைதிப்படையை அனுப்புங்கள். அப்புறம் பாருங்கள் ஒருத்தன் கூட உருப்படியா இருக்க முடியாது.
Rate this:
Share this comment
PADMANABHAN R - Chennai,இந்தியா
25-ஏப்-201913:26:28 IST Report Abuse
PADMANABHAN Rமட்டமான கருத்து மற்றும் புத்தி. அதனால்தான் இப்படியெல்லாம் எண்ண தோன்றுகிறது....
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
24-ஏப்-201906:55:16 IST Report Abuse
J.Isaac இந்தியாவிலேயே எந்த விசாரணையும் ஒழுங்கா நேர்மையா நடத்தமுடியல. இந்த லச்சணத்துல இலங்கையிலா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X