விசாரணைக்கு வெளிநாட்டு உதவி :இலங்கை பிரதமர் ரணில்

Updated : ஏப் 23, 2019 | Added : ஏப் 23, 2019 | கருத்துகள் (6)
Advertisement

கொழும்பு: இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் குறித்த விசாரணைக்கு வெளிநாட்டு உதவி கோரப்பட்டுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.







இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:

இலங்கையில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக உள்ளனர். அவர்களிடையே நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான பயங்கரவாதத்தின் தொடர்ச்சியாகவே இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்கள் வெளிநாட்டில் பயிற்சி பெற்றுள்ளனர். தொடர் குண்டு வெடிப்பின் தாக்குதல் பின்னணியில் ஐ.எஸ். அமைப்பு உள்ளது.






நியூசிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியா என்பது குறித்து இப்போது பதில் கூறமுடியாது. தொடர்ந்து புலனாய்வுத்துறையினரும் உளவுத்துறையினரும் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு வெளிநாடுகளின் உதவியையும் கோரியுள்ளோம். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகளே. அவர்களின் நோக்கம் அதிகமாக உயரிழப்பை ஏற்படுத்தவேண்டும் என்பதே.

மிகப்பெரி ய குழு ஒன்று இத்தாக்குதலில் ஈடுபட்டது என்பதை உறுதிபடுத்துகிறோம். நாட்டின் பாதுகாப்பு தேவைகளை கருத்தில்கொண்டே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் போலீசாரும்,ராணுவத்தினரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புபணியில் அனைத்து மதத்தினரும் இணைந்து செயல்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கடந்த ஞாயிற்றுகிழமை 8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 320க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஏப்-201907:50:18 IST Report Abuse
Srinivasan Kannaiya இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகளே. அவர்களின் நோக்கம் அதிகமாக உயரிழப்பை ஏற்படுத்தவேண்டும் என்பதே....................விலை பொய் விட்டனரா என்று விசாரிக்கலாமே
Rate this:
Share this comment
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
24-ஏப்-201907:13:02 IST Report Abuse
Sankare Eswar நன்று சிங்கள பெருமானே
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
24-ஏப்-201904:17:19 IST Report Abuse
meenakshisundaram அது சரி ஆனா (வைகோ வசனம் ) கொத்து கொத்தாக .கொத்து கொத்தாக தமிழனை கொன்று போட்டதை விசாரிக்க (ஐநா சபை) மட்டும் எதிர்ப்பு காட்டியது என் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X