பதிவு செய்த நாள் :
'வெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது
வாக்காளர் அடையாள அட்டை'

ஆமதாபாத்:''ஐ.டி., எனப்படும் வாக்காளர் அடையாள அட்டை, ஐ.இ.டி., எனப்படும் வெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


நேற்று, லோக்சபாவுக்கு, மூன்றாம் கட்ட தேர்தல் நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான, குஜராத்தில் உள்ள, 26 லோக்சபா தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக, தேர்தல் நடந்தது.பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் இரவு, ஆமதாபாதுக்கு சென்றார். அங்கு, கவர்னர் மாளிகையில் தங்கினார்.


ஆமதாபாத், ரானிப் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டு போடுவதற்காக, நேற்று காலை, கவர்னர் மாளிகையிலிருந்து திறந்த வேனில், மோடி சென்றார். அவருடன், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவும்

சென்றார். வழி நெடுக, சாலையோரங்களில் மக்கள் நின்று, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்ட பின், பிரதமர் மோடி கூறியதாவது:இந்தியாவில் நடக்கும் ஜனநாயக திருவிழாவில், நான் ஒரு வாக்காளனாக, என் கடமையை நிறைவேற்றினேன். சொந்த மாநிலத்தில் ஓட்டளித்தது, எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.கும்பமேளாவில் நீராடும் போது, ஒருவர் மனதில் ஏற்படும் உணர்வு, ஓட்டளிக்கும் போது, எனக்கு ஏற்பட்டது. அனைவரும் தவறாமல் ஓட்டளிக்கவேண்டும்.


ஜனநாயகத்தில், ஓட்டு அடையாளம், பெரும் ஆயுதம். ஐ.டி., எனப்படும், வாக்காளர்கள் அடை யாள அட்டை, சக்தி வாய்ந்த, ஐ.இ.டி., எனப்படும், வெடி குண்டை விட பலமானது. பயங்கரவாதி களுக்கு ஆயுதம் போல், வாக்காளர்களுக்கு ஓட்டுரிமை ஒரு வலுவான சக்தி. இதை உணர்ந்து,

Advertisement

சரியாக பயன்படுத்த வேண்டும். 21ம் நுாற்றாண்டில் பிறந்தவர்கள், முதல் முறை யாக ஓட்டளிக்க உள்ளனர். இந்த நுாற்றாண்டு, அவர்களுக்கு சொந்தமானது. இதை உணர்ந்து, நாட்டு நலன் கருதி, அவர்கள் ஓட்டளிக்க வேண்டும். புதிய வாக்காளர் களுக்கு, என் வாழ்த்துகள்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தாயிடம் ஆசி


பிரதமர் மோடியின் தாய்,ஹீராபென், 95, குஜராத் தலைநகர் காந்தி நகர் அருகே உள்ள, ரய்சான் கிராமத்தில், தன் இளைய மகன், பங்கஜ் மோடியுடன் வசிக்கிறார்.நேற்று காலை, தம்பி வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, தாய் ஹீராபென்னை சந்தித்தார். மோடிக்கு சால்வை, இனிப்புகள், தேங்காய் கொடுத்து வரவேற்ற ஹீராபென், லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற, மோடியை ஆசிர்வதித்தார்.


பின், தன் மகன் பங்கஜ் மோடியுடன், ஓட்டுச்சாவடிக்கு சென்று, ஹீராபென் ஓட்டு போட்டார். நாட்டின் பாதுகாப்புக்கு ஓட்டுபா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, குஜராத் மாநிலம், காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆமதாபாதில் உள்ள, நாரான்புரா பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு, தன் குடும்பத்தினரு டன் சென்று, அமித் ஷா ஓட்டு போட்டார்.


பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஜனநாயக திருவிழாவில், மக்கள் உற்சாகமாக பங்கேற்றுள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரும் தவறாமல் ஓட்டு போட வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்காகவும், நாடு வளர்ச்சி பெறவும், அனைவரும் ஓட்டு போட வேண்டும். எதிர்கால இந்தியாவுக்காக ஓட்டு போடுமாறு, புதிய வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமித் ஷா கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (8+ 53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Halfmoon - Karaikudi,இந்தியா
24-ஏப்-201912:41:59 IST Report Abuse

Halfmoonஅவ்வளவு மக்களும் பாவம் இல்ல.. இதெல்லாம் உங்களை சும்மா விடாது..

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஏப்-201908:23:02 IST Report Abuse

Srinivasan Kannaiyaபான்ப்ரோக்கர் கடையில் கூட அதை அடகு வைக்க சக்திவாய்ந்தது

Rate this:
Suresh - chennai,இந்தியா
24-ஏப்-201908:21:36 IST Report Abuse

Sureshமோடிக்கு வேறு உதாரணமே கிடைக்கலையா? இலங்கையில் வெடிகுண்டு, அது இதுன்னு கலவரமா இருக்கும் போது இது தேவையா? சபை அறிந்து பேசுதல் தலைவனின் அழகு.

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X