பதிவு செய்த நாள் :
ரபேல் தீர்ப்புக்கு கருத்து: ராகுலுக்கு, 'நோட்டீஸ்'

புதுடில்லி:'ரபேல்' போர் விமான ஒப்பந்தம் தொடர்பான, வழக்கின் தீர்ப்பை திரித்துக் கூறியதாக தொடரப்பட்டுள்ள, நீதிமன்ற அவ மதிப்பு வழக்கில், காங்., தலைவர் ராகுலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ரபேல் ,தீர்ப்பு, கருத்து, ராகுல், 'நோட்டீஸ்'

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, கடந்தாண்டு, டிச., 14ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனுக்கள், தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில், பத்திரிகைகளில் வெளியான செய்திகளில், குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங் கள், ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
பதில் மனு

'ராணுவ அமைச்சகத்தில் இருந்து, திருட்டுத் தனமாக நகல் எடுக்கப்பட்ட, இந்த ஆவணங்கள் அடிப்படையில், விசாரிக்க கூடாது' என, மத்திய அரசு தரப்பில் வலி யுறுத்தப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

அப்போது, இது குறித்து கருத்து தெரிவித்த, காங்., தலைவர், ராகுல், 'தன்னை, நாட்டின் காவல்காரன் என்று கூறிக் கொள்ளும் பிரதமர், மோடி, ஒரு திருடன் என்று உச்ச நீதிமன்றம்

உறுதி செய்துள்ளது' என, குறிப்பிட்டார். நீதிமன்றம் கூறாததை, கூறியது போல், திரித்துக் கூறியுள்ளதாக, பா.ஜ., பெண், எம்.பி., மீனாட்சி லேகி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கில், ராகுல் சார்பில், நேற்று முன்தினம், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'தேர்தல் பிரசார வேகத்தில், தவறுதலாக கூறியதாக' ராகுல், வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுலின் பதில் மனு குறித்து, மீனாட்சி லேகி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், முகுல் ரோஹத்கியிடம், அமர்வு, கருத்து கேட்டது.முகுல் ரோஹத்கி கூறியதாவது: ராகுல், ஒரு தேசியக் கட்சியின் தலைவராக உள்ளார். அவருக்கு உதவுவதற்கு, பல சிறந்த வழக்கறிஞர்கள் உடன் உள்ளனர்.

மேலும், நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்தது என்பதை படித்துப் பார்க்காமல், ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.பதில் மனுவிலும், மோடி ஒரு திருடன் என்ற தன் கருத்தில் உறுதியாக இருப்ப தாக குறிப்பிட்டுள்ளார். தற்போது, பல்வேறு இடங் களிலும், நீதிமன்றத் தீர்ப்பை குறிப்பிடாமல், அந்த வாசகத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். தன்கருத்துக்கு, அவர் மன்னிப்பும் கேட்கவில்லை. வருத்தம் என்ற வார்த்தையை, அடைப்புக்குறிக்குள் பயன்படுத்தி உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை

ராகுல் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர்,

Advertisement

அபிஷேக் மனு சிங்வி வாதிட்டதாவது:இந்த வழக்கில், ராகுல் தரப்பின் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அதையடுத்து, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது:இந்த வழக்கில், ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடவில்லை. அந்த உத்தரவு தற்போது பிறப்பிக்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை, வரும், 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அன்றைய தினம், சீராய்வு மனுக்களும் சேர்த்து விசாரிக்கப் படும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.நேரில் ஆஜராக வேண்டும்.

நீதிமன்ற உத்தரவு குறித்து, முகுல் ரோஹத்கி, நிருபர்களிடம் கூறியதாவது: கிரிமினல் அவ மதிப்பு வழக்கில், நீதிமன்றத்தால் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டால், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்படி, ராகுல், நீதி மன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Lakshmana Kumar - thiruvarur,இந்தியா
24-ஏப்-201912:51:44 IST Report Abuse

S Lakshmana Kumarமோடி பதினைந்து லட்சம் கொடுப்பாருன்னு யாரு சொன்னது. பதினைந்து லட்சம் வேணும்னு சொல்லுற மேதாவிகலே, ஒன்னு தெரியுமா? பதினைந்து லட்சம் பேங்க் அசவுண்ட்ல போட்டா என்ன ஆவும்னு தெரியுமா? பொருளாதாரம் தாறுமாறா போகும். அதை தான் இந்த மேதாவி கூட்டம் கேட்குதோ என்னமோ. உழைக்காமல் உங்களுக்கு வரும் ஒவ்வொரு காசும் வரி கட்டிய இந்தியனின் காசு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Rate this:

NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்சார், நீங்கள் வேறு. அந்த அளவிற்கு விவரமுள்ளவர்கள் என்றால், மூளையுள்ளவர்கள் என்றால் இப்படி ஒரே விஷயத்தை நாம் திரும்ப திரும்ப விளக்க வேண்டிய அவசியம் இருக்காதே. இந்தியாவிலுள்ள ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் போட்டால் நாடு என்னவாகும் என்பதை பற்றி துளியாவது யோசித்திருந்தால் இவர்கள் இப்படி கேட்பார்களா?. மோடிஜி மீது வீண்பழி சுமத்த, குறை சொல்ல இவர்களுக்கு ஏதோ ஒரு காரணம் வேண்டும். அது இந்த 15 லட்சம். இல்லாவிடில் ஒன்றுமே இல்லாத ரபில். ...

Rate this:
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
24-ஏப்-201908:34:35 IST Report Abuse

Yes your honorஅதீதமான துடுக்குத்தனம், மிகவும் அதிகமான முதிர்ச்சியற்ற தன்மை (கட்டிப்பிடிப்பது, கண்ணடிப்பது, ஈ என இளிப்பது, கண்டபடி பேசுவது பிறகு மன்னிப்புக் கேட்பது, அடுத்தவர் எழுதிக் கொடுப்பதை அப்படியே வரிக்கு வரி காப்பியடிப்பது) - இவரா பெருமைமிகு நம் இந்திய நாட்டின் பிரதமர் வேட்பாளர்...?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஏப்-201908:13:28 IST Report Abuse

Srinivasan Kannaiyaதலைவர் ராகுலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸுக்கு வெற்றி கிடைத்தால் இதை திரும்ப பெற்றுவிடுவார்கள்

Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
24-ஏப்-201911:01:55 IST Report Abuse

Sridharஅப்போ தோத்துட்டா உள்ளே போட்டு நொங்கு எடுத்துடுவார்களா? தோப்பது என்னவோ உறுதி. ...

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X