'தேர்தலில் போட்டியிட தடையா?'

Added : ஏப் 23, 2019
Advertisement
 'தேர்தலில் போட்டியிட தடையா?'

மும்பை, 'அரசியல் காரணத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும், என்னை, தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்க, சிலர் முயற்சிக்கின்றனர்' என, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, பெண் சாமியார், பிரக்யா தாக்குர், சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம், மாலேகானில், 2008ல், நடந்த குண்டு வெடிப்பில், ஆறு பேர் கொல்லப்பட்டனர்; பலர் படு காயமடைந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, பெண் சாமியார் பிரக்யா, தற்போது, ஜாமினில் வெளியில் வந்து உள்ளார்.மனு தாக்கல்தற்போது அவர், மத்திய பிரதேச மாநிலம், போபால் லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், மாலேகான் குண்டு வெடிப்பில், தன் மகனை பறிகொடுத்த, நிசார் சையது என்பவர், மும்பையில் உள்ள, தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில், ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்; அதில் அவர் கூறியுள்ளதாவது:தன் உடல் நலத்தை காரணம் காட்டித் தான், பிரக்யா ஜாமினில் வந்துள்ளார். தற்போது, தேர்தலில் போட்டியிட்டு, பிரசாரம் செய்யும் அளவுக்கு, அவர் உடல் நலம் தேறியிருப்பதால், அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும்.குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரக்யாவுக்கு, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில், அவர் கூறியுள்ளார்.
எச்சரிக்கை

இதையடுத்து, பிரக்யா சார்பில், அவரது வக்கீல், சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:அரசியல் உள் நோக்கத்துடனும், விளம்பரத்துக்காகவும், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது போன்ற தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்து, இந்த நீதிமன்றத்தின் விலை மதிப்பற்ற நேரத்தை, வீணடிக்க முயற்சிக்கின்றனர்.இந்த மனுவை தள்ளுபடி செய்வதுடன், எதிர்காலத்தில், இதுபோன்ற தேவையற்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படாமல் தடுக்கும் வகையில், எச்சரிக்கையுடன் கூடிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X