பதிவு செய்த நாள் :
பதற்றம்!
வெடி குண்டு நிரப்பிய லாரி ஊடுருவல்;
இலங்கையில் மீண்டும் பரபரப்பு

கொழும்பு:வெடி குண்டு நிரப்பப்பட்ட லாரியும், வேனும், இலங்கை தலைநகர் கொழும்புக்குள் ஊடுருவியதாக, பாதுகாப்புஅதிகாரிகள் எச்சரித்ததை அடுத்து,நாடு முழுவதும், மீண்டும் பதற்றமும், பீதியும் நிலவியது. அனைத்து வாகனங்களிலும், போலீசார், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்டை நாடான, இலங்கையில், சமீபத்தில், ஈஸ்டர் பண்டிகை அன்று, தேவாலயங்கள், நட்சத்திரஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில், அடுத்தடுத்து, சக்தி வாய்ந்தகுண்டுகள் வெடித்தன.இதில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 38 பேர் உட்பட, 321 பேர், உடல் சிதறி பலியாகினர். மேலும், 500க்கும் மேற்பட்டோர், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர சோதனை

இந்த கொடூர தாக்குதலுக்கு, உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கையில் நெருக்கடி நிலை அமல்படுத்தப் பட்டு உள்ளது. கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், தலைநகர் கொழும்புக்குள், பயங்கர வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட லாரியும், வேனும் ஊருவியுள்ளதாக, துறைமுக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், போலீசாருக்கும், ராணுவத்திற்கும், நேற்று, தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கொழும்பு நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களிலும், போலீசார், தீவிர சோதனை நடத்தினர்.
நகருக்குள் ஏற்கனவே உள்ள, லாரி, வேன், கார்உள்ளிட்ட வாகனங்களிலும், சோதனை நடத்தினர். இந்த தகவலை அடுத்து, கொழும்பு மட்டுமல்லா மல், இலங்கை முழுவதும், பீதியும், பதற்றமும்நிலவியது.இதற்கிடையே,

இலங்கை யில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு, சர்வதேச பயங்கவாத அமைப்பான, 'இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்' எனப்படும், ஐ.எஸ்., பொறுப்பேற்று ள்ளதாக, நேற்று மாலை, தகவல் வெளியானது.

'அமக்' என்ற செய்தி நிறுவனத்தின் மூலமாக, ஐ.எஸ்., அமைப்பு, இந்த தகவலை வெளியிட்டு உள்ளதாக, இலங்கை புலனாய்வு அமைப்புகள் தெரிவித்தன.அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளைச் சேர்ந்த, கிறிஸ்துவ மக்களை குறி வைத்து, இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக, இலங்கை பார்லிமென்ட், நேற்று அவசரமாக கூடியது. இதில், இலங்கை ராணுவ இணை அமைச்சர், விஜேவர்த்தனே கூறியதாவது: தொடர் குண்டு வெடிப்புகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சில முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன.

நியூசிலாந்து நாட்டின், கிறைஸ்ட் சர்ச் நகரில், கடந்த மாதம், 15ல், இரண்டு மசூதிகளில், துப்பாக்கி யுடன் புகுந்த ஒரு நபர், சரமாரியாக சுட்டான்.இதில், மசூதிகளில் இருந்த, 50 பேர் பலியாகினர்; இது, உலகம் முழுவதும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்குவதற்காகவே, கிறிஸ்துவ மக்களை குறிவைத்து, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளதாக, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் குண்டு வெடிப்புகள் நடப்பதற்கு முன், உள்ளூரைச் சேர்ந்த ஒரு அமைப்பின் உறுப்பினர், நியூசிலாந்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்தை, சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.இந்த தாக்குதல் தொடர்பாக, இதுவரை, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மனித வெடி குண்டுகளாக செயல்பட்ட ஏழு பேரும், இலங்கை யில் உள்ள, உள்ளூர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது பின்னணி

Advertisement

குறித்தும் விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

கவலை:

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது:சர்வதேச பயங்கரவாதத்தின் கரங்கள், இலங்கையையும் எட்டியுள்ளது என்பது, கவலை அளிக்கிறது. இலங்கையில், இதுவரை நடந்த தாக்குதல்களை விட, இது, கொடூரமானது என்பதில்,எந்த சந்தேகமும் இல்லை.நாட்டில் உள்ள எல்லா முஸ்லிம் அமைப்புகளும், இந்த கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஒரு சிலருக்கு மட்டுமே, இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டு உள்ளனர் என், தெரியவந்துள்ளது.

இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையை, வெற்றிகரமாக முறியடித்து, விரைவிலேயே இயல்பு நிலையை ஏற்படுத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.நான், அதிபர் பதவியிலிருந்து விலகியபோது, நாட்டில், அமைதி நிலவியது. பயங்கரவாதம் இல்லாத நாட்டை, ஒப்படைத்து விட்டுச் சென்றேன். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள், உள்நாட்டு பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல், பயங்கரவாதத்தை வளர அனுமதித்து விட்டனர்.

ராஜபக்சேஇலங்கை முன்னாள் அதிபர்

மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளை தடுக்க, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததற்கு, இலங்கை அரசு, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது குறித்து, இலங்கை அரசு செய்தி தொடர்பாளர், ரஜிதா சேனரத்னே கூறியதாவது: இலங்கை யில் தாக்குதல் நடத்த, சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக, புலனாய்வு அமைப்புகள், முன்கூட்டியே எச்சரித்திருந்தன.

அதுகுறித்து, அரசு பரிசீலித்தது. ஆனாலும், தாக்குதல்களை தடுக்க, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காக, பாதிக்கப்பட்ட மக்களிடம், அரசு தரப்பில் மன்னிப்பு கோருகிறோம். பாதிக்கப் பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப் படும். குண்டு வெடிப்புகளில் சேதம் அடைந்த தேவாலயங்கள், அரசு செலவில் சீரமைக்கப் படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்தியர்கள் 10 பேர் பலி

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு களில், இந்தியாவைச் சேர்ந்த, எட்டு பேர் பலி யானதாக, நேற்று முன்தினம் கூறப்பட்டது. இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த, பட்டு ராஜா, மேரி கவுடா ஆகியோரின் உடல்கள், அடையாளம் காணப்பட்டன. இதை அடுத்து, இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தி யர் எண்ணிக்கை, 10 ஆக அதிகரித்து ள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஏப்-201914:30:40 IST Report Abuse

ஆரூர் ரங்வெடிப்பு நிகழ்ந்தவுடனே முதல் கருத்தாக நான் போட்டது நிஜம்தானே (நியூசிலாந்து தாக்குதலுக்குப் பழிவாங்கும் பதிலடியாகக்கூட இருக்கலாம். இலங்கை முஸ்லிம்களிலும் அதிகம் பேர் வஹாபி, ஐ எஸ் ஆதரவாளர்களாகிவிட்டதாக செய்திகள் வந்தபோதே அரசு விழித்துக்கொள்ளவில்லை. இலங்கை கிறித்தவர்களிலும் 80% க்குமேல் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது. ) முஸ்லிம் தோழர்களுக்கு மத்தியிலேயே வளர்ந்த எனக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஏப்-201914:16:44 IST Report Abuse

ஆரூர் ரங்இறுதி நாள் நெருங்கும் போது பூமியில் அறியாமை பெருகி விடும், மடையர்கள் பெருகி விடுவார்கள், மடையர்கள் மார்க்க தலைவர்களாக வருவார்கள், அவர்கள் தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுப்பார்கள் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
24-ஏப்-201915:14:01 IST Report Abuse

dandyஇன்னும் 4 ம் நூற்றாண்டு பித்தட்டல்களை நம்பினால் குண்டு போடவே சொல்லலும் ...கபீர் எதிரிகள் ஆனால் அவர்கள் கண்டு பிடிப்புகளை எல்லாம் நாங்கள் விரும்பி பாவிப்போம் FACE BOOK முதலாளி ஒரு யூதன் ...இன்று இதில் இல்லாத ஆண் ..பெண் மார்க்க ரசிகர்கள் இல்லை ...

Rate this:
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
26-ஏப்-201904:03:32 IST Report Abuse

aryajaffna ...

Rate this:
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஏப்-201910:22:38 IST Report Abuse

R.PERUMALRAJAமுதல்வன் படத்தில் ரகுவரனே குண்டை வைத்து , பின் வெடிக்க செய்து மக்களை திசை திருப்பியது போல தான் ....அல்லது ,ராஜபக்ச அவனது ராணுவ அதிகாரிகளை அவன் விருப்பப்பட்ட இடத்திற்கு மாற்றி ,வரும் தேர்தலில் வெல்வதற்கு தான் .

Rate this:
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஏப்-201913:16:08 IST Report Abuse

Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  நீங்க திருந்தமாடீங்க பாய்.. சரி விடுங்க..- நிமுத்தவா முடியும் நியூஸிலாந்துல நடந்த அட்டாக் வன்மையா கண்டிக்கப்பட வேண்டியதுதான் அதில் மாற்று கருத்து இல்லை.. ஒரு மதவெறி பிடித்த பைத்தியக்காரன் தான் பிரான்சில் பார்த்த ஒரு நிகழ்ச்சியின் தூண்டுதலால் அந்த பாவத்தை செய்துள்ளான்.. அவன் வாழ தகுதி அற்றவன் மரண தண்டனை கொடுத்து சாவடிக்க வேண்டும்.. சரி இப்போ இலங்கை மேட்டருக்கு வருவோம்.. இது தனி மனிதன் உணர்ச்சி வசப்பட்டு செய்த காரியம் அல்ல.. ஒரு கும்பலால் மூளை சலவை செய்யப்பட்டு, அப்பாவி மக்களை கூண்டோடு கொள்ள தற்கொலை தாக்குதல் நடத்தி உள்ளனர்.. இது தீர யோசிச்சு என்ன செய்றோம்னு தெரிஞ்சி பல பேர் ஒத்துழைப்புடன் (உள்ளூர்வாசிகள் உட்பட) தாக்கி உள்ளனர்.. இதுக்கு நீ முட்டு கொடுக்குற இந்த புத்தியைத்தான் மத தீவிரவாதம் என்கிறோம்.. அங்கு தாக்குதல் நடத்தியவனுக்கு நிச்சயம் இந்நேரம் பல _____ களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டிருக்கும்.. இத தூக்கி ராஜபக்ஷே மேல போட்டுட்டு நீ முட்டு கொடுக்குற மதத்தை கேவலத்தனம்.. ஒரு கும்பல் என்னடான்னா ஊர் ஊரா போயி மூளை சலவை செய்யுது.. இன்னொரு கும்பல் பிளான் செஞ்சி குண்டு வச்சி கொத்து கொத்தா கொல்லுது.. ஆனா இங்க பாஜக மதவாத கட்சின்னு சவுண்டு விடுறது.. இந்த குண்டு வெடிப்பை நடத்திய கும்பலை கண்டித்து திட்ட துப்பில்லை.. கேட்டா என்னையவுட அமைதியான ஆளு லோகத்துல இல்லைன்னு சவடால்..புள்ள குட்டிகளியாவது படிக்க வைங்கப்பா.. பள்ளி கூட்டத்துல ...

Rate this:
Shekar - Mumbai,இந்தியா
24-ஏப்-201913:46:15 IST Report Abuse

Shekarஇல்லை , பெருமாள் ராஜா, சர்ச் க்கு போனவர்கள் அனைவரும் மடியில் ஆளுக்கு ஒரு குண்டை கட்டிக்கொண்டு சென்றனர். ஆனால் இப்போது அப்பாவி அஹிம்சையுள்ள IS மேல் பழி போடுகிறார்கள். (குறிப்பு: தமிழன் இவ்வளவு மட சம்பிராணியா?) ...

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X