எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எப்போது?
தமிழக மின் வாரியத்தில்
5,000 பேர் நியமனம் எப்போது?

களப் பிரிவில், 'கேங்மேன்' என்ற பதவியில், 5,000 ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை, தமிழக மின் வாரியம் விரைவாக துவக்கும்படி, ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக, மின் வாரியம், 5,000 பேர், நியமனம், எப்போது?

தமிழ்நாடு மின் வாரியம், மின் கம்பம் நடுதல், 'கேபிள்' பதிப்பு உள்ளிட்ட கள பிரிவு பணி களுக்கு, முதல் முறையாக, 'கேங்மேன்' என்ற பதவியை ஏற்படுத்தி, 5,000 பேரை தேர்வு செய்ய முடிவு செய்தது.


கல்வி தகுதி, ஐந்தாம் வகுப்பு. இதற்கு, வாரிய இணையதளத்தில், மார்ச், 22 முதல் ஏப்ரல், 24 வரை விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப் பட்டது. லோக்சபா தேர்தல் சமயத்தில், கேங்மேன் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய,

சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இணைய தளம் வாயிலாக, விண்ணப்பம் பெறும் பணியை, வாரியம் துவக்கவில்லை.


இதுகுறித்து, ஒப்பந்த ஊழியர்கள் கூறியதாவது: சென்னையில் வீசிய, 'வர்தா' புயல்; குமரியில் வீசிய, 'ஒக்கி' புயல்; டெல்டா மாவட்டங்களில் வீசிய, 'கஜா' புயலின் போது, பல லட்சம் மின் கம்பங்கள் மற்றும் ஆயிரக்கணக்கில், மின் சாதனங்கள் சேதமடைந்தன.இவற்றை சரி செய்யும் பணியில், பல ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தகுதி, திறமையின் அடிப்படையில், கேங்மேன் பதவியில், கள பணிக்கு, 5,000 பேரை தேர்வு செய்யப் போவதாக, மார்ச்சில், மின் வாரியம் அறிவித்தது.தேர்தல் சமயத்தில், ஆட்கள் தேர்வு நடந்தால், அது, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்ட ளிக்க துாண்ட செய்யும் என்ற கருத்து எழுந்ததால், அப்போது, ஆட்களை தேர்வு செய்யவேண்டாம் என, வலியுறுத்தினோம்.

இந்த சூழலில், மின் வாரியத்தில், ஏற்கனவே, ஒப்பந்த ஊழியர்களாக உள்ளவர்களை, கேங்மேன் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று, உயர்

Advertisement

நீதிமன்றத்தில், சிலர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.அப்படி தேர்வு செய்தால், அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர் கள், தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே, அரசியல் சிபாரிசுடன், வேலையில் சேர்க்க வாய்ப்புள்ளது.

அதற்கு இடம் தராமல், தற்போது, தேர்தல் முடிவடைந்ததால், நேர்மையான முறையில், கேங்மேன் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியை, நீதிமன்ற அனுமதியுடன், மின்வாரி யம், உடனே துவக்க வேண்டும். மழை காலத் திற் குள், ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
24-ஏப்-201916:18:37 IST Report Abuse

S.Ganesanதற்போது உள்ள லைன் மேன் என்ற பணியில் உள்ளவர்களே கம்பங்களில் ஏறுவதற்கும் , இன்ன பிற வேலைகளுக்கும் தங்களுடன் ஒருவரை - அவரவர் தனிப்பட்ட முறையில் வைத்து கொண்டு அலைவது தெரியுமா ? அவர்கள்தான் பழுது நீக்கிய பிறகு நம்மிடம் வந்து காசு கேட்டு பெறுவார்கள். அதில் ஒரு பகுதி லைன் மேனுக்கும் , ஒரு பகுதி இந்த உதவியாளுக்கும் பிரித்துக்கொள்ளப்படும். இது போன்ற அரசு அங்கீகாரமில்லாத விஷயங்களை கேட்பார் இல்லை.

Rate this:
sundara pandi - lagos ,நைஜீரியா
24-ஏப்-201914:31:35 IST Report Abuse

sundara pandiலஞ்சம் ஊழல் இன்றி தகுதியான ஊழியர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டு நியமிக்கவேண்டும். அப்பொழுதான் மக்களுக்கு அதிகாரிகள் மீதும் துறையின் மீதும் நம்பிக்கை வரும். அமைச்சர் மற்றும் கைத்தடிகளின் அதிகாரத்தை ஒடுக்க அரசு அதிகாரிகள் செயல்பட தொடங்கவேண்டும். மீறியும் தொந்தரவு செய்பவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும். இதுவே நேர்மையான பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்

Rate this:
J.Isaac - bangalore,இந்தியா
24-ஏப்-201911:39:31 IST Report Abuse

J.Isaacமார்க்கெட் ரேட் ?

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X