பதிவு செய்த நாள் :
'ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு
நீதி வழங்குவேன்'

துங்கர்பூர், ''கடந்த, ஐந்து ஆண்டுகளில், மத்திய பா.ஜ., அரசு, மக்களுக்கு வழங்கிய அநீதியை நீக்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நீதி வழங்குவேன்,'' என, காங்., தலைவர் ராகுல் பேசினார்.

'ஐந்து ஆண்டு,மக்களுக்கு. நீதி. வழங்குவேன்'ராகுல்

ராஜஸ்தானில், முதல்வர், அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள துங்கர்பூர் தொகுதியில், நேற்று நடந்த, காங்., தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:

கடந்த தேர்தலில், பல வாக்குறுதிகளை, பிரதமர் மோடியும், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும் அள்ளி வீசினர். ஆனால், ஆட்சி அமைத்த பின், கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில், மக்களுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு, அநீதி வழங்கியுள்ளது. இதை, மாற்ற ஆசைப்படுகிறேன். மத்தியில், காங்., ஆட்சி அமைந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, மக்களுக்கு நிச்சயம் நீதி வழங்குவேன்.


'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' பற்றி, பிரதமர் மோடியும், பா.ஜ.,வினரும் பேசுகின்றனர், நாங்கள்

ஆட்சிக்கு வந்தால், வறுமைக்கு எதிராக, சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவோம். ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில், 22 லட்சம் பேருக்கு, அரசு வேலை வழங்குவோம்.

பிரதமர் மோடி, தன் மனதில் தோன்றுவதை யெல் லாம், வாக்குறுதியாக அளிக்கிறார். ஆனால், நான், நிறைவேற்ற முடிந்தவற்றை மட்டுமே, வாக்குறுதி யாக அளித்துள்ளேன்.கடந்த ஐந்து ஆண்டுகளில், விவசாயிகள், ஏழைகள், பழங்குடியின மக்கள் என, சமூகத்தில், எந்த தரப்பு மக்களுக்கும், மத்திய அரசு நன்மை செய்யவில்லை.

ஏனெனில், நாட்டில் உள்ள, 15 - 20 பணக்காரர் களுக்காகவே, பிரதமர் மோடி, ஆட்சி நடத்துகிறார்.எந்த நாட்டிலும், எந்த அரசும், இதுவரை, மக்களின் வங்கி கணக்கில், நேரடியாக பணத்தை செலுத்திய தில்லை. ஆனால், காங்., ஆட்சி அமைந்தால், இந்த சாதனை நிறைவேற்றப்படும்.அனில் அம்பானி போன்ற திருடர்களின் வங்கி கணக்கில், கோடிக் கணக்கான பணத்தை, பிரதமர் மோடி, 'டிபாசிட்' செய்துள்ளார். அவர்களின் வங்கி கணக்கிலிருந்து, அந்தப் பணத்தை எடுத்து, ஏழைகளுக்கு வழங்குவோம்.

வங்கி கடனை, திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகளுக்கு, சிறை தண்டனை விதிக்கப் படுகிறது. ஆனால், கோடிக்கணக்கில் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது, எந்த நடவடிக்கை யும் எடுப்பதில்லை.இந்த நிலையை நாங்கள்மாற்று வோம். விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்வோம்.இவ்வாறு, ராகுல் பேசினார்.

சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
காங்., தலைவர் ராகுல், உத்தர பிரதேசத்தில்,

Advertisement

2016ல், விவசாயிகள் யாத்திரை மேற்கொண் டார். இந்த யாத்திரை, 2016, அக்., 6ல், டில்லியில் நிறைவு பெற்றது.அப்போது ராகுல் பேசுகை யில், 'இந்தியாவுக்காக, சர்ஜிக்கல் ஸ்டிரைக் மேற்கொண்ட வீரர்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீரில், உயிர் தியாகம் செய்த வீரர்கள் ஆகியோரின் பின், பிரதமர் மோடி ஒளிந்து கொள்கிறார். 'அவர்களின் தியாகத்தை, அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துகிறார். இது மிகவும் தவறு' என்றார்.

பிரதமர் மோடி பற்றி, ராகுல் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, டில்லி மாவட்ட நீதிமன்றத்தில், பா.ஜ., சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி பூனம் பாம்பா முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு, இந்த வழக்கை மாற்றி, நீதிபதி பாம்பா உத்தரவிட்டார். மேலும், ''வழக்கை, மாஜிஸ்திரேட் சமர் விஷால், நாளை மறுதினம் விசாரிப்பார்,'' என, நீதிபதி அறிவித்தார்.


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
24-ஏப்-201920:43:13 IST Report Abuse

balஇப்போது தினமும் ஒரு பொய் மற்றும் மோடியை திருடன் என்று சொன்னதற்கு கோர்ட்டில் மன்னிப்பு கோரல்...வெட்கமா இல்லை...

Rate this:
bal - chennai,இந்தியா
24-ஏப்-201920:42:02 IST Report Abuse

bal60 வருடமா - எமெர்ஜெண்சி, 1984 கொலைகள், ராணுவ ஊழல், 2G ஊழல், டெக்கான் ஊழல், போபர்ஸ், தமிழின கொலைக்கு உடந்தை, சிறுபான்மையினரை தலையில் தூக்கி வைத்தல், பொய் வழக்கு போடுதல், காவிரி துரோகம், இப்போ மேகதாது துரோகம், இன்னும் பல....அதோடு நீரும் உன் அம்மாவும் உன் கூட்டணியும் ஜாமினில் வெளியில் உள்ளனர் குற்றத்திற்காக...

Rate this:
bal - chennai,இந்தியா
24-ஏப்-201920:39:07 IST Report Abuse

balரொம்ப கிழிச்சுடீங்க மத்யாபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டிஸ்கரில்...ஒருவனுக்கு கூட விவசாய கடன் தள்ளுபடி பண்ணல...பத்து நாட்களில் பண்ணுவேன் என்று சொல்லி பதவிக்கு வந்தது...நூறு நாட்களுக்கு மேல் ஆனது...ஆனால் கமல் நாத் சுவிட்ஸர்லாந்து போய் வருவதற்ற்கு ஒன்றரை கோடி செலவானது...இது பற்றி ஒருவனும் செய்தி போடவில்லை.

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X