பஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு: ஆந்திரா,தெலுங்கானா மோதலில் அம்பலம்

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (12)
Advertisement
பஞ்சாபில், 2 கோடி பேர் தகவல் திருட்டு: ஆந்திரா,தெலுங்கானா மோதலில் அம்பலம்

ஆந்திரா - தெலுங்கானா அரசுகள் இடையே, தகவல் திருட்டு தொடர்பான மோதலில், பஞ்சாபை சேர்ந்த, இரண்டு கோடி வாக்காளர்களின், 'ஆதார்' தகவல்களும் திருடப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.ஆந்திராவில், முதல்வர், சந்திரபாபு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தெலுங்கு தேசம் கட்சிக்கு, 'சேவா மித்ரா' என்ற, 'மொபைல் ஆப்' உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சேவைகளை, 'ஐ.டி.கிரிட்ஸ்' என்ற தனியார் நிறுவனம் வழங்கி வருகிறது.




தப்பிப்புகடந்த மார்ச்சில், லோகேஸ்வரா என்ற கணினி வல்லுனர் அளித்த புகாரின்படி, தெலுங்கானாவின், சைபராபாத் போலீசார், அங்குள்ள, ஐ.டி.கிரிட்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தி, 60, 'ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ்கள், மெமரி கார்டுகள்' மற்றும் கணினி சாதனங்களை பறிமுதல் செய்தனர்.இதற்கு பதிலடியாக, ஆந்திர அரசு, லோகேஸ்வராவை கைது செய்ய முயன்றபோது, அவர், நீதிமன்றம் மூலம் கைதாகாமல் தப்பித்தார்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட, ஹார்டு டிஸ்குகளை சோதித்ததில், ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த, ஏழு கோடி பேரின் ஆதார் தகவல்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.அதனால், திருடிய தகவல்கள் மூலம், தேர்தலில் வாக்காளர்களை வளைக்க முயல்வதாக, தெலுங்குதேசம் மீது, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டினார்.ஆனால், 'ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிக்கு உதவவே, அனுமதியின்றி ஐ.டி.,கிரிட்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தி, ஹார்டு டிஸ்க் தகவல்களை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கைப்பற்றியது' என,சந்திரபாபு கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, இரு தரப்பில் நடந்து வந்த வார்த்தைப் போர், தேர்தல் காரணமாக சிறிது காலம் கைவிடப்பட்டிருந்தது.மீண்டும் விஸ்வரூபம்இந்நிலையில், ஆந்திரா, தெலுங்கானாவில், கடந்த, 11ல் தேர்தல் முடிந்ததை அடுத்து, தற்போது மீண்டும் தகவல் திருட்டு விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.தெலுங்கானா அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு, ஹார்டு டிஸ்குகளை சோதித்ததில், பஞ்சாபைச் சேர்ந்த, இரண்டு கோடி பேரின் ஆதார் தகவல்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.எதற்காக பஞ்சாப் வாக்காளர்களின் விபரங்கள் திருடப்பட்டன என்பது தெரியவில்லை என, சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.பஞ்சாப் வாக்காளர்களின் தகவல் திருட்டு, பா.ஜ., காங்கிரஸ், அகாலி தளம் கட்சிகளுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் திருட்டு தொடர்பாக, ஆதார் ஆணையம், ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளது. - நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஏப்-201907:44:55 IST Report Abuse
Srinivasan Kannaiya என்ன நடந்தாலும் திருந்த வேண்டியவர்கள் திருந்தமாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஏப்-201907:35:34 IST Report Abuse
ஆரூர் ரங் இந்த ஆதார் விவரங்களை வைத்துக்கொண்டு யாரையும் ஆள்மாறாட்டம் செய்துவிட முடியாது ஆதார் எண் என்பது ஒரு குறியீடு அது அவரவர் விழிப்படம் மாறும் கைரேகையைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. மற்றபடி நமது தனிப்பட்ட விவரங்களை வங்கிகள் அஞ்சலகங்கள் காவல், நீதி, கல்வி நிலையங்களில் தாராளமாகக் கொடுத்துள்ளோமே. அவற்றை வைத்து என்ன செய்யமுடியுமோ அதைத்தான் இந்த திருடப்பட்ட ஆதார் விவரங்களை வைத்தும் செய்யலாம் அவ்வளவுதான். என்னவோ நடக்ககூடாதது நடந்துவிடும் என எதிர்பார்க்க வேண்டாம். எங்கோ எதற்கோ நாம் கொடுத்த நமது ஆதார் போன்ற தகவல்களை எப்படியோ பெற்று அவற்றை வைத்துதான் பல கல்வி நிலையங்கள் மின்னணு வீடு உபயோக சர்வீஸ், பைனான்ஸ் என பலரும் நமக்கு செல்போனில் அழைத்து ஆர்டர் வேண்டுகிறார்கள் என்பது எவ்வளவு பேருக்குத்தெரியும்?
Rate this:
Share this comment
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
24-ஏப்-201912:52:44 IST Report Abuse
பாமரன்அதானே பார்த்தேன்... செஞ்சது ...கன்னு தெரிஞ்சதும் நம்ம ரங்கீடு வக்காலத்து வாங்க வந்துட்டாப்ல... இதில யாராவது தமிழ்நாட்டுக்காரன் பேரு வந்திருந்தால்?. அப்பிடியே பிளேட்டை திருப்பி போட்டு டுமீளன்னு ஒரு கதை சொல்லி தேச துரோகி லெவலுக்கு கொண்டு போயிருப்பார்......
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
24-ஏப்-201906:56:00 IST Report Abuse
அசோக்ராஜ் ஆதாருக்கு எதிராக அவ்வப்போது பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருக்கிறார்களே. என்னைப் பற்றிய தகவல்களை எடுத்து எனக்கெதிராக இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் அல்லது இனிமேல் என்ன செய்யக்கூடும்? வல்லுனர்களை கேட்டு விளக்கமாக ஒரு கட்டுரை தரும்படி தினமலரை வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X