'பேக் டு பெவிலியன்'

Added : ஏப் 24, 2019
Advertisement

மத்திய பிரதேசத்தில், சட்டசபை முன்னாள் துணை தலைவர், சவுத்ரி ராகேஷ் சிங், பா.ஜ.,வில் இருந்து மீண்டும், காங்கிரசுக்கு திரும்பியுள்ளார். பா.ஜ., மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகானின் அழுத்தம் காரணமாக, அவர், பா.ஜ.,வில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.ஆறு ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர், திக் விஜய் சிங்குடன் ஏற்பட்ட மோதலால், பா.ஜ.,வுக்கு சென்றார். அதனால், காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ள நிலையில், அவரை மீண்டும் காங்கிரசில் சேருமாறு, முன்னாள் மத்திய அமைச்சர், ஜோதிராதித்ய சிந்தியா கேட்டு கொண்டார். இதையடுத்து, சவுத்ரி ராகேஷ் சிங், மீண்டும் தாய் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.சட்டை கிழியுமா?மத்திய பிரதேச முதல்வர், கமல்நாத்தின் மகன், நகுல் நாத், சிண்ட்வாரா லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். பெரும்பான்மைக்கு போராடும் நிலையில், மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் ஆட்சி உள்ளது.எனவே, தற்போதைய நிலையில், மகனை எப்படியாவது, எம்.பி.,யாக்கி விட வேண்டும் என, கமல்நாத் களம் இறங்கியுள்ளார்.அவர் தனது பிரசாரத்தில், என் மகன், எம்.பி.,யாகி உங்களுக்கு நல்லது செய்யாவிட்டால், அவனின் சட்டையை கிழித்துக் கேளுங்கள் என, சவால் விட்டு பேசுகிறார். இதை பார்த்து, பா.ஜ., அணியினர், வெற்றி பெற்றால் தானே சட்டையை கிழிப்பதற்கு; அந்த தைரியத்தில் கமல்நாத் பேசுகிறார் என, பதிலடி விமர்சனம் வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X