சென்னை:தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, சென்னை அறிவாலயத்தில், தமிழக காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி தலைமையில், முன்னாள் தலைவர் இளங்கோவன், கே.ஆர்.ராமசாமி, ஜெயகுமார், கோபண்ணா, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட, காங்., பிரமுகர்கள் சந்தித்துப் பேசினர்.
வெற்றி வாய்ப்பு
இந்த சந்திப்பு குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தேர்தல் முடிந்த பின், மரியாதை நிமித்தமாக, காங்., தலைவர்களும், வேட்பாளர் களும், ஸ்டாலினை சந்தித்து பேச விரும்பினர்.
அதன்படி, நேற்று முன்தினம், ஆரணி காங்., வேட்பாளர், விஷ்ணு பிரசாத் சந்தித்தார். நேற்று, தேனி
வேட்பாளர் இளங்கோவன், திருவள்ளூர் வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோர், ஸ்டாலினை சந்தித்து, தங்கள் தொகுதிகளின் ஓட்டு பதிவு மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து பேசினர்.
அவர்களிடம், 'தி.மு.க., கூட்டணி, 35 லோக்சபா தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடந்த, 18 சட்ட சபை தொகுதிகளில், 15லும் வெற்றி பெறும்' என, ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.'ஆளுங் கட்சி தரப்பில், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வினியோகம் நடந்தது. இருந்தும், பணத்தை பெற்ற வாக்காளர் கள், ஓட்டை மாற்றி, தி.மு.க., கூட்டணிக்கு பதிவு செய்துள்ளனர்' என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்த தாக, ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிரச்னை
'விடுதலை சிறுத்தைகள் கட்சியால், எந்த தொகுதிகளிலும் பிரச்னை ஏற்படவில்லை.
தேர்தலில், அவர்களின் பணி சிறப்பாக இருந்தது' என, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர், ஸ்டாலினிடம் பாராட்டி பேசியுள்ளனர்.
அடுத்த மாதம், 19ம் தேதி நடக்கவுள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளுக் கும், பொறுப்பாளர் களை நியமித்து, தாங்களும் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ளதாகவும், ஸ்டாலினிடம், காங்., நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். இவ்வாறு,கட்சி வட்டாரங்கள் கூறின.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (28)
Reply
Reply
Reply