Putin and Kim Jong Un will meet in Russia on Thursday, says state news | நாளை புடின்- கிம் ஜோங் சந்திப்பு| Dinamalar

நாளை புடின்- கிம் ஜோங் சந்திப்பு

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (2)
நாளை புடின்- கிம் ஜோங் சந்திப்பு


மாஸ்கோ: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக சந்தித்து பேசினர். அப்போது கொரிய தீபகற்ப பகுதியை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற உடன்பாடும் செய்து கொண்டனர். பின்னர் மீண்டும் கடந்த பிப்ரவரியில் வியட்நாம் தலைவர் ஹனோய் நகரில் சந்தித்து பேசினர். 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமி்ர் புடினும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் நாளை ரஷ்யாவின் கிழக்கு மாகாணமான வால்டிவேஸ்டாக் நகரில் சந்தித்து பேசுகின்றனர்.




இந்த சந்தி்ப்பின் போது இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி கொள்வார்களே தவிர இரு தரப்பிலும் எந்த ஒப்பந்தமும் நடைபெறாது என புடினின் அலுவலக உதவியாளர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X